நமக்கு ராஜா ராணி கதை தெரியும்…ஆனால், ராஜா ராணி அழகு குறிப்புகள் பற்றி தெரியுமா..? | Beauty secrets of ancient kings & Queens

0
0

ரோஸ் நீர் குளியல் :-

பழங்காலத்து ராஜா – ராணிகள் எப்போதும் இயற்கை பொருட்கள் நிறைந்த குளியல் தொட்டியில்தான் குளிப்பார்களாம். அதிலும் குறிப்பாக ரோஜா இதழ்களை தொட்டியில் முழுக்க நிரப்பி அதன் மேல்தான் குளியல் செய்வார்கள். மேலும், வெறும் நீரில் குளிக்காமல் ரோஜா நீரில் குளிப்பார்களாம். இது அவர்களின் சருமம் மிக மென்மையாகவும், பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது.

கழுதை பால் குளியல் :-

கழுதை பால் குளியல் :-

இது மிக வியப்பாகத்தான் இருக்கும். அந்த காலத்து ராஜா ராணிகள் கழுதை பாலிலும் தினமும் தங்கள் குளியலை மேற்கொள்வார்களாம். குளியல் தொட்டியில் தேன், ஆலிவ் எண்ணெய் மற்றும் கழுதை பாலை ஆகியவற்றை கலந்து விடுவார்கள். இதில்தான் தினக்குளியலை செய்வார்கள். இந்த குளியல் சருமத்தை மிக இளமையாக வைக்கவும், சுருக்கங்கள் வராமலும் காக்கும்.

நீண்ட அடர்த்தியான கூந்தல் :-

நீண்ட அடர்த்தியான கூந்தல் :-

ராணிகள் தங்கள் முடியை அடர்த்தியாகவும் நீளமாகவும் வைக்க தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்துவார்கள். ஆலிவ் எண்ணெய் முடியை மிகவும் உறுதியாக வைக்கவும், முடி உதிர்வை தடுக்கவும் வைக்கும். முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த தேன் கலந்த ஆலிவ் எண்ணெய் குளியல் நன்கு உதவும்.

குங்குமப்பூ :-

குங்குமப்பூ :-

அதிக விலை கொண்ட பொருட்களின் பட்டியலில் முதன்மை இடத்தில் உள்ள இந்த குங்குமப்பூ பல அழகு சிறப்புகளை கொண்டது. இது சருமத்தின் பொலிவை அதிகரிக்கும். அத்துடன் வெண்மையான முகத்தை தரும். குங்குமப்பூ கலந்த பாலை தினமும் ராஜா ராணிகள் இரவில் குடிப்பார்கள். இதுதான் அவர்களில் முக வெண்மைக்கு முக்கிய காரணம்.

ராஜாக்களின் அழகு குறிப்பு :-

ராஜாக்களின் அழகு குறிப்பு :-

ராணியை, தங்கள் அழகில் மயங்க செய்ய பல ராஜாக்களும் அக்காலத்தில் எண்ணற்ற அழகு குறிப்புகளை உபயோகித்தனர். அதில் முக்கியமான ஒன்றுதான் முல்தானி மட்டி. தக்காளியுடன் முல்தானி மட்டியை கலந்து சிறிது நேரம் ஊற வைத்து, பின் அதனுடன் 1 சிட்டிகை மஞ்சள் மற்றும் சந்தனம் சேர்த்து முகத்தில் பூசுவார்களாம். இதுதான் ராஜாக்கள் ராணிகளை கவர்ந்திழுக்க செய்யும் அழகு குறிப்பு.

பதுமை போன்ற முகம் :-

பதுமை போன்ற முகம் :-

பல ராணிகள் பார்ப்பதற்கு நிஜ பதுமைகள் போல இருப்பார்கள். இது முற்றிலும் உண்மைதான். அவர்களை பொம்மைகள் போல வைக்க இந்த அழகு குறிப்புதான் உதவுகிறது. 1/3 கப் பாலுடன் 1 முட்டையின் வெள்ளை கரு, 1 எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்கு கலந்து முகத்தில் பூசுவர்களாம். இது முகத்தின் துளைகள் திறக்க செய்து செல்களை புத்துணர்வூட்டி பதுமை போல இருக்க வைக்கிறது. மேலும் பாலில் உள்ள லாக்டிக் அமிலம் இறந்த செல்களை அகற்றி கரும்புள்ளிகள் வராமல் தடுக்கிறது.

என்றும் இளமைக்கு காரணம் :-

என்றும் இளமைக்கு காரணம் :-

பொதுவாகவே ராஜா ராணி என்றாலே பல நாட்கள் அழகாவும், இளமையாகவும் இருப்பார்கள். அதற்கு காரணம் அவர்களின் ஆடம்பர வாழ்க்கைதான் என்று நம்மில் பலர் நினைத்து கொண்டிருப்போம். ஆனால் இதற்கு மாறாக அவர்களின் நீண்ட இளமைக்கு முக்கிய காரணம் இந்த வாதுமை கொட்டை மற்றும் கேரட் தான். இவை இரண்டும் உடலுக்கு மிகுந்த போஷாக்கை தரும். எனவே அவர்கள் இயற்கையாகவே இளமையாக இருக்க முடிகிறது.

பாத அழகிற்கு :-

பாத அழகிற்கு :-

முகம் மற்றும் முடியின் அழகை மட்டும் அவர்கள் பாதுகாத்து வரவில்லை. மாறாக உடம்பின் ஒவ்வொரு பகுதிக்கும் அழகு சேர்த்து வந்தார்கள். அந்த வகையில் பாதங்களை அழகாக வைக்க தயிர் மற்றும் பாதாம் எண்ணெய்யை சேர்த்து பாதங்களில் தடவி வந்தனர். இது பாதங்களை மிக அழகாக வைக்க உதவும்.

இத்தகைய அழகு குறிப்புகளையே அந்த காலத்து ராஜா ராணி பயன்படுத்தி வந்தனர்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.