நடிகையை பிரிந்த இயக்குனருக்கு 2வது திருமணமாம்: பெண் தேடும் பெற்றோர் | Director says YES to second marriage

0
0

சென்னை: பெயரில் வெற்றியை வைத்திருக்கும் இயக்குனர் இரண்டாவது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.

பெயரில் வெற்றியை வைத்திருக்கும் இயக்குனர் அண்டை மாநிலத்தை சேர்ந்த நடிகையை காதலித்து திருமணம் செய்தார். அவர்களின் திருமண வாழ்க்கை துவங்கிய வேகத்தில் முடிந்துவிட்டது.

அந்த நடிகை குடும்பத்திற்கு செட்டாகாது, வேண்டாம் என்று எவ்வளவோ சொன்னோம் கேட்டியா என்று இயக்குனரிடம் அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

கிசுகிசு

இயக்குனரை பிரிந்த வேகத்தில் நடிகையின் பெயர் பெரிய இடத்து நடிகருடன் சேர்ந்து அடிபட்டது. நடிகரின் கட்டுப்பாட்டில் அவர் இருப்பதாகவும் கூறப்பட்டது. நான் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை என்று கூறி விளக்கம் அளித்தார் நடிகை.

2வது திருமணம்

2வது திருமணம்

இயக்குனருக்கு 2வது திருமணம் செய்து வைக்க அவர் பெற்றோர் விரும்புகிறார்களாம். இத்தனை நாட்களாக திருமண பேச்சை எடுத்தாலே கோபப்பட்டு வந்த இயக்குனர் தற்போது சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

தேடல்

தேடல்

இயக்குனர் மனம் மாறிய கையோடு பெண் பார்க்கத் துவங்கிவிட்டார்களாம். இந்த ஆண்டுக்குள் அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரின் பெற்றோர் திட்டமிட்டுள்ளார்களாம்.

ரிலீஸ்

ரிலீஸ்

இயக்குனர் தற்போது ஒரு படத்தை எடுத்து வருகிறார். அதை ரிலீஸ் செய்த பிறகு அவருக்கு திருமணம் நடக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அவரின் முன்னாள் மனைவியும் நல்ல மாப்பிள்ளை கிடைத்தால் மீண்டும் திருமணம் செய்வேன் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.