நடிகர் சங்கத் தேர்தல்… விஷாலுக்கு எதிராக களமிறங்கும் ஜே.கே.ரித்திஷ் | J. K.Rithish to contest against Vishal

0
0

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக நடிகர் ரித்திஷ் அறிவித்துள்ளார்.

ராதாரவி நடித்த ‘பொறுக்கி அல்ல நாங்கள்’ பட விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில், ராதாரவி, ஜே.கே.ரித்திஷ், சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது விழா மேடையில் பேசிய ரித்திஷ், ‘விரைவில் நடைபெற உள்ள நடிகர் சங்கத் தேர்தலில் தானும் போட்டியிட உள்ளதாக’ தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் அவர் பேசியதாவது:

என் ஆசை:

தமிழ் திரையுலகில் சின்னச் சின்னப் படங்கள் வெற்றி பெற வேண்டும் என்பது தான் என் ஆசை. ஏனெனில் இப்படிப்பட்ட சின்ன படங்கள் தான் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு உதவுபவை. இந்தப் படத்தில் நடித்துள்ளவர்கள் பெரிய ஆளாக வர வேண்டும்.

போட்டி:

போட்டி:

விரைவில் நடைபெற உள்ள நடிகர் சங்கத் தேர்தலில் நானும் போட்டியிட இருக்கிறேன். ராதாரவி போன்றோர் என் அருகில் இருக்கின்றனர்” என்றார்.

பொதுக்குழு கூட்டம்:

பொதுக்குழு கூட்டம்:

கடந்த 2015ம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்தனர். இவர்கள் பதவி காலம் 3 ஆண்டுகள் என்பதால் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் தேதியை முடிவு செய்ய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இம்மாதம் 19-ந் தேதி நடைபெற இருக்கிறது.

விஷால் போட்டி:

விஷால் போட்டி:

இத்தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக தற்போதைய சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் ஏற்கனவே அறிவித்து உள்ளார். அவரது அணியை எதிர்த்து போட்டியிட ராதாரவி, ஜே.கே.ரித்திஷ் ஆகியோர் புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நோட்டீஸ்:

நோட்டீஸ்:

கடந்த தேர்தலின் போது விஷால் அணிக்கு பின்புலமாக இருந்து, ராதாரவி அணியை எதிர்த்து செயல்பட்டவர் ரித்திஷ். ஆனால் விஷால் அணியினர் பொறுப்பிற்கு வந்ததும், அவர்களுக்கும் ரித்திஷுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ரித்திஷுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நடிகர் சங்கத்தில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார் என்பதும் நினைவுகூரத் தக்கது.