த்ருவ் கார் விபத்துக்கு காரணம் வெறும் கவனக்குறைவு மட்டுமே: விக்ரம் சார்பில் விளக்கம் | Dhruv Car accident issue: Vikram side clarifies

0
0

சென்னை: நடிகர் விக்ரமின் மகன் த்ருவ் சென்ற கார் விபத்தில் ஈடுபட்டது வெறும் கவனக்குறைவு தான் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விக்ரமின் மகன் த்ருவ் சென்ற கார் மோதி 3 ஆட்டோக்கள் சேதமடைந்தன. இந்த விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இது குறித்து விக்ரம் மற்றும் த்ருவ் தலைமை ரசிகர் நற்பணி மன்ற தலைவர் சூரிய நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

நடிகர் விக்ரம் மகன் த்ருவ் இன்று அதிகாலையில் ஆட்டோ மீது காரை மோதி விபத்து ஏற்படுத்தியதாக செய்திகள் வெளியாகின.

நடிகர் விக்ரம் மகன் த்ருவ் அவரின் நண்பரின் வீட்டிற்கு சென்றுவிட்டு இன்று அதிகாலையில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராமல் ஆட்டோவுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இதில் காருக்கும், ஆட்டோவிற்கும் சேதம் ஏற்பட்டிருக்கிறது.

விபத்தில் பாதிக்கப்பட்டவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பிவிட்டார்.

இது கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட விபத்து மட்டுமே என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.