த்ரிஷான்னா ‘குஞ்சுமணி’, சயீஷான்னா ‘ஜூஸி’: ஏன் ஆர்யா, ஏன் இப்படி? | Arya and his yuck nicknames for Trisha, Sayeesha

0
3

சென்னை: சயீஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி ட்வீட்டிய ஆர்யா அவரை ஜூஸி என்று அழைத்துள்ளார்.

நடிகை சயீஷா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கஜினிகாந்த் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த சயீஷாவுக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார் ஆர்யா.

ஜூஸி டார்லிங் சயீஷாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று ட்வீட்டியுள்ளார் ஆர்யா. இதை பார்த்த நெட்டிசன்களோ அது என்ன ஜூஸி டார்லிங், ஒரு பெண்ணை பார்த்து இப்படியா சொல்வது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது சயீஷாவும், தானும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஜூஸி சயீஷா என்று ட்வீட்டினார் ஆர்யா. அதில் இருந்து சயீஷாவை ஜூஸி என்றே அழைக்கிறார்.

மேலும் த்ரிஷாவை குஞ்சுமணி என்று அழைத்து வருகிறார் ஆர்யா. ஆர்யா நீங்கள் வைக்கும் செல்லப் பெயர்கள் கேவலமாக உள்ளது என்று நெட்டிசன்கள் மோசமாக திட்டி ட்வீட்டுகிறார்கள்.