தோனி பிறந்தநாளில் வைரலான அனுஷ்கா சர்மா புகைப்படம் | Anushka Sharma’s reaction on Dhoni’s birthday went viral!

0
0

லண்டன்: தோனியின் பிறந்தநாள் விழாவில் கேக் வெட்டும்போது அனுஷ்கா பார்த்த அனல் பார்வை புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் 37-வது பிறந்தநாள் விழா இங்கிலாந்தின் கார்டிஃப்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தோனி தனது மனைவி சாக்‌ஷி, மகள் ஜிவா தோனி மற்றும் சக வீரர்களுடன் பிறந்தநாளை கொண்டாடினார். தோனியின் பிறந்தநாள் விழாவில் கணவர் விராட் கோஹ்லியுடன் பங்கேற்ற அனுஷ்கா சர்மா தான் இப்போது தோனியை விட அதிகமாக பேசப்பட்டு வருகிறார்.

சமீபத்தில் கோஹ்லி விடுத்த ஃபிட்னஸ் சவாலை ஏற்றுக்கொண்டு உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு கவனத்தை ஈர்த்தார் அனுஷ்கா.

தோனியின் பிறந்தநாள் விழாவில் கேக் கட் செய்யும்போது கோஹ்லி உள்பட அனைவரும் கொண்டாட்ட மனநிலையில் இருக்கின்றனர். அப்போது அனுஷ்கா ஷர்மாவின் முகத்தில் இனம்புரியாத கோபம் தெரிகிறது. ஏன் அனுஷ்கா இப்படி இருக்கிறார்? அவருக்கு கேக் கொடுக்கவில்லையா? என நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு ஷேர் செய்து வருகின்றனர்.