தொழுநோயை காரணம் காட்டி இனி விவாகரத்து பெற முடியாது: மக்களவையில் மசோதா அறிமுகம்

0
1

‘தனிப்பட்ட சட்டங்கள் திருத்த மசோதா 2018’ மக்களவையில் நேற்று அறிமுகம் செய்யப் பட்டது. கிறிஸ்தவர்களுக்கான விவாகரத்து சட்டம், முஸ்லிம் திருமண முறிவு சட்டம், இந்து திருமணச் சட்டம், சிறப்பு திருமணச் சட்டம், இந்து தத்தெடுப்பு மற்றும் பராமரிப்புச் சட்டம் ஆகிய 5 தனிப்பட்ட சட்டங்களில் திருத்தம் செய்ய இந்த மசோதா வழி செய்கிறது. சட்டத்துறை இணை அமைச்சர் பி.பி.சவுத்ரி இதனை அறிமுகம் செய்தார்.

“தொழுநோயை குணப்படுத்த முடியாத காலத்தில் விவாகரத்து பெற இந்நோயை ஒரு காரண மாக குறிப்பிடுவதற்கு தனிப் பட்ட சட்டங்களில் வழி செய்யப் பட்டிருந்தது. தற்போது தீவிர மற்றும் நவீன மருத்துவத்தால் தொழுநோயை குணப்படுத்த முடியும் என்பதால் சமூகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

எனினும் தொழுநோயாளி களுக்கு பாரபட்சமான இந்த சட்டப்பிரிவு தொடர்கிறது. இந் நிலையில் உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரை அடிப்படையில் இந்த சட்டப்பிரிவை நீக்க மத்திய அரசு முடிவு செய்தது” என்று மசோதா வில் கூறப்பட்டுள்ளது.