தொழிலாளர்கள் நல வாரியத்தில் கல்வி உதவி பெற விண்ணப்பிக்கலாம்

0
2

தொழிலாளர்கள் நல வாரியம் வழங்கும் பல்வேறு உதவித் தொகைகளைப் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட் டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய செயலரும், கூடுதல் தொழிலாளர் நல ஆணையருமான உமாதேவி, வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

“தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்துக்கு தொழிலாளர் நலநிதி செலுத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற் கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முதல் 10 மாணவர்கள்

பிளஸ் 1 முதல் முதுகலை பட்டப் படிப்புக்கும், பொறி யியல், மருத்துவம், சட்டம், விவசாயம், ஆசிரியர் பயிற்சி, உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி படிப்புகளில் பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு, பட்டயப் படிப்பு ஆகியவற்றுக்கும் தொழிற் பயிற்சி கல்வி மற்றும் மேல் நிலைக்கல்வி படிப்புக்கும் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் கல்வி மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறுவோருக் கும் (முதல் 10 மாணவர்கள்) கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

விவரங்கள் அறிய…

கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் மற்றும் விளக்கவுரையை, `செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், த.பெ.எண் 718, தேனாம்பேட்டை, சென்னை- 600 006’ என்ற முகவரிக்கு சுயவிலாசமிட்ட தபால் தலை ஒட்டிய தபால் உறையை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம். www.labour.tn.gov.in என்ற இணையதளத்திலும் விவரங்கள் அறியலாம்.

கடைசி நாள் அக்.31

கூடுதல் விவரங்கள் அறிய 044-24321542 என்ற தொலை பேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 31-ம் தேதி ஆகும்.’’

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.