தூத்துக்குடி வன்முறை; 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

0
0

தூத்துக்குடி கலவரம் தொடர்பாக கைதான 2 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் கடந்த மே 22-ல் நடைபெற்ற கலவரம் தொடர்பாக 250-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். தூத்துக்குடி அருகே சிவத்தையாபுரத்தைச் சேர்ந்த குருபரணி(36), முருகேசன் நகரைச் சேர்ந்த அருண் என்ற ராஜா(37) ஆகிய இருவர் மீதும் சிப்காட் காவல் நிலையத்தில் கலவரம் தொடர்பாக வழக்குகள் உள்ளன. இருவரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல் கண்காணிப்பாளர் முரளி ராம்பா பரிந்துரையின் பேரில், ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார்.