தீவிரவாத அச்சுறுத்தலை   எதிர்கொள்ள ராணுவம் தயார்: ராணுவ தளபதி பிபின் ராவத் தகவல்

0
8

பதான்கோட்

தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு ராணுவம் தயார் நிலையில் இருப்பதாக ராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் அருகே உள்ள மமுன் ராணுவ தளத்துக்கு நேற்று சென்று ராவத் ஆய்வு செய்தார். அப்போது ராணுவத்தின் தயார் நிலை மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பு மேம்பாட்டு வசதிகள் குறித்து உயர் அதிகாரிகள் ராவத்திடம் எடுத்துரைத்தனர். பின்னர் அங்குள்ளவீரர்களுடன் ராவத் உரையாடினார்.

பின்னர் ராவத் கூறும்போது, “தீவிரவாத அச்சுறுத்தலை எதிர் கொள்வதற்கு ராணுவம் தயார் நிலையில் இருக்கிறது” என்றார்.

ராவத்துடன் ராணுவத்தின் மேற்கு படை உயர் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் சுரிந்தர் சிங்கும் சென்றிருந்தார் என பாதுகாப்புத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று முன்தினம் பஞ்சாப் மாநிலத்துக்கு சென்ற ராவத், அமிர்தசரஸ் நகரில் உள்ள பொற்கோயிலுக்கு சென்று வழிபட்டார்.