“திரையைப் பார்த்து தரையை நம்பமுடியாது”…. ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து பிரபல நடிகை! | Priya Bhavani Shankar about Rajini Kamal Politics!

0
1

சென்னை: நடிகை பிரியா பவானி ஷங்கர் ரஜினி கமல் அரசியல் குறித்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் இரண்டு துருவங்களாக இருக்கக்கூடிய ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருவருமே அரசியல் பயணத்தை துவங்கி விட்டனர். இந்த நிலையில் இருவரின் அரசியல் பயணம் குறித்து பேசியிருக்கிறார் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

பிரியா பவானி ஷங்கர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். இவர் மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். இவர் நடித்திருந்த கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி கருத்து தெரிவித்துள்ள பிரியா, நாம் எப்போதுமே நடிகர்களிடமிருந்து சில விஷயங்களை எதிர்பார்க்கிறோம். அவர்கள் திரையில் பேசும் வசனங்களை அவர்களுடைய நிஜ வாழ்க்கையோடு ஒப்பிடுகிறோம். நாம் எல்லோருமே அரசியலில் தொடர்பு இருக்கிறது. நம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்தேலே நாம் பேசுவதுதான் அரசியல் எனப் புரிந்துவிடும்.

ரஜினி கமல் அரசியல் பற்றி சொல்வதென்றால், அவர்கள் இருவரையுமே எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர்கள் இப்போதுதான் கட்சிப் பெயரை அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் மிகப்பெரிய நடிகர்கள் என்பதால் நம்ப வேண்டுமென்று அவசியமில்லை. அரசியல் ஒன்றும் இரண்டரை மணி நேரப் படம் கிடையாது, அவர்கள் தேர்தலில் ஜெயித்து வெற்றிபெற்று ஐந்து வருடங்க ் ஆட்சி செய்யப்போகிறார்கள். இந்த விஷயத்தில் நான் ஒரு சாதாரண குடிமகளாக முடிவெடுப்பேன் எனக் கூறினார்.

மேலும், நான் அவர்களுடைய படம் ரிலீஸ் ஆனால், முதல் நாள் முதல் ஷோ பார்ப்பேன். அதற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை எனவும் தெரிவித்தார்.