திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ் மறைவு; பேரவையில் அதிமுக பலம் 115 ஆக குறைந்தது

0
0

திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ஏ.கே.போஸ் மறைவையடுத்து சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 115 ஆக குறைந்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக 134 இடங்களில் வெற்றி பெற்றது. திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற  எஸ்.எம்.சீனிவேல்,எம்எல்ஏவாக பதவி ஏற்பதற்கு முன்பே உடல் நலக்குறைவால் காலமானார். பணப் பட்டுவாடா புகாரால் நிறுத்

தப்பட்டிருந்த தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளுடன் திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் சேர்த்து இடைத்தேர்தல் அறிவிக் கப்பட்டது. திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளிலும் அதிமுகவே வெற்றி பெற்றது. இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் பேரவைத் தலைவருடன் சேர்த்து 136 ஆக இருந்தது.

கடந்த 2016-ல் முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்தார். அதன்பின், அதிமுகவின் பலம் 135 ஆக குறைந்தது. அதன்பின், கட்சியில் ஏற்பட்ட பல குழப்பங் களைத் தொடர்ந்து டிடிவி தினகரன் தலைமையில் 18 எம்எல்ஏக்கள் பிரிந்து சென்றனர். முதல்வர் பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்ததைத் தொடர்ந்து 18 எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் பி.தனபால் உத்தர விட்டார். அப்போதே, 18 தொகுதி யும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பதவி நீக்கத்தை எதிர்த்து 18 பேரும் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கில் முடிவு வரும் வரை 18 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தக்கூடாது என்று உத்தர விட்டது.

18 எம்எல்ஏக்கள் பதவி நீக்கப்பட்டதால் சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் பலம் 116 ஆக குறைந்தது. இதில் ரத்தினசபாபதி (அறந்தாங்கி), கலைச்செல்வன்( விருதாச்சலம்), பிரபு (கள்ளக் குறிச்சி) ஆகிய மூவரும் தினகர னுக்கு ஆதரவு அளித்தனர். இருப்பினும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் அதிமுக எம்எல்ஏக்களாகவே தொடர்கின்றனர். இதற்கிடையே, ஜெயலலிதா மறைவால் காலி யான ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.

இந்நிலையில் திருப்பரங்குன் றம் எம்எல்ஏ போஸ் நேற்று மரணமடைந்தார். இதையடுத்து பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் எண்ணிக்கை 115 ஆக குறைந்துள்ளது. இந்த தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மூலம் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பவேண்டும். அதன்பின் தேர்தல் ஆணையம் தொகுதி காலியான தாக அறிவிக்கும். இதையடுத்து 6 மாதங்களுக்குள்ளோ அல்லது அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலுடன் சேர்த்தோ திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என தெரிகிறது.