திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்த சமந்தா.. செல்பி எடுக்க முண்டியடித்த ரசிகர்கள்….! | Actress Samantha go to Thirupathi

0
0

திருப்பதி: நடிகை சமந்தா இன்று காலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினார்.

தென்னிந்தியாவின் லீடிங் ஹீரோயின்களில் ஒருவரான சமந்தா, திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். அதில் தன்னுடைய ரோல் சிறப்பாகவும் வெயிட்டாகவும் இருக்குமாறு ‘அலார்ட்’டாகவும் இருக்கிறார். தற்போது கூட அவர் நடித்து “சீமராஜா”, “யூ டர்ன்” ஆகிய படங்கள் செப்டம்பரில் வெளிவர உள்ளது. அதேபோல “அநீதி கதைகள்” என்ற படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த சமந்தா சிறிது காலத்திற்கு முன்பு தீவிர பெருமாள் பக்தை ஆகிவிட்டார். அதனால் அடிக்கடி திருப்பதிக்கு விசிட் அடித்து வருகிறார். சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று இரவு திருமலைக்கு வந்தார். இன்று காலை வி.ஐ.பி. தரிசனத்தில் பங்கேற்று சிறப்பு வழிபாடு செய்தார். சாமி தரிசனம் முடிந்த பின்னர் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

அதனை பெற்றுக் கொண்ட சமந்தா, கோயிலை விட்டு வெளியே வந்தார். அப்போது வெளியே திரண்டிருந்த ரசிகர் கூட்டம் அவரை சூழந்து கொண்டது. உடனடியாக சமந்தாவின் பாதுகாவலர்கள் அவரை மீட்டு வெளியே கொண்டு வர படாத பாடுபட்டனர். அதிலும் சிலர் செல்பி எடுக்க முயன்றனர்.

அங்கு நின்றிருந்த செய்தியாளர்கள் கோயிலுக்கு வந்தது குறித்து கேள்வி கேட்டனர். அதற்கு, “ஏழுமலையான் கோயிலில் வழிபாடு நடத்தியது மகிழச்சி அளிக்கிறது” என்று பதிலளித்தார். இதையடுத்து சமந்தாவின் பாதுகாவலர்கள் மீட்டு பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.