திருடன் கையிலேயே சாவியை கொடுத்த பிக் பாஸ்: நல்லா வருவீங்க பாஸ் | Yashika is in Bigg Boss 2 prison

0
0

சென்னை: போயும் போயும் திருடன் கையிலேயே சாவியை கொடுத்திருக்கிறார் பிக் பாஸ்.

பிக் பாஸ் 2 வீட்டில் காதலிக்கிறேன் என்ற பெயரில் ஷாரிக்கும், ஐஸ்வர்யாவும் வரம்பு மீறி நடந்து கொள்கிறார்கள். இதற்கிடையே காதலியை மிஸ் பண்ணுகிறேன் என்று கூறிக் கொண்டு இந்த மகத் யாஷிகாவை கட்டி கட்டிப் பிடிக்கிறார்.

அந்த புள்ளைய ஜூஸ் புழியிற மாதிரி புழியிறானே என்று சமூக வலைதளங்களில் சிங்கிள்ஸ் கொந்தளிக்கிறார்கள்.

யாஷிகா

பிக் பாஸ் வீட்டில் உள்ள சிறையில் யாஷிகா இருப்பது போன்ற ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதே வீடியோவில் போலீஸ் கெட்டப்பில் இருக்கிறார் மகத். நல்ல போலீஸ், நல்ல திருடன். அவர்களின் கெட்டப்பை எல்லாம் பார்த்தால் டாஸ்க் மாதிரி தெரிகிறது.

ஐஸ்வர்யா

யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோரை பார்த்து பாவப்பட்டவர்கள் கூட தற்போது அவர்களை பார்த்தாலே பத்திக்கிட்டு வருகிறது என்கிறார்கள்.

மோதல்

பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் மோதிக் கொள்ளும் மற்றொரு ப்ரொமோ வீடியோவும் வெளியாகியுள்ளது. வீடியோவில் பகலில் தோத்துடுவேன் ராத்திரியில ஜெயிச்சிடுவேன்னு பொன்னம்பலம் கூறுகிறார்.

தப்பு

மக்கள் மனதை வென்ற பொன்னம்பலத்தை தப்பாக காட்டியுள்ளது பார்வையாளர்களுக்கு பிடிக்கவில்லை. கோபப்படாதீங்க ராசாக்களா, ப்ரொமோ வீடியோவை பார்த்து எந்த முடிவுக்கும் வர வேண்டாம்.

பிக்பாஸ் இல்லத்தில் இன்று .. கைதி ஆகிறார் யாஷிகா