திமுக தலைவர் கருணாநிதி மறைவு: திருவாரூர் தொகுதி காலியானதாக அறிவிப்பு

0
0

திமுக தலைவர் மு.கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று திருவாரூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவரும், திருவாரூர் தொகுதி எம்எல்ஏவாக இருந்தவரு மான மு.கருணாநிதி கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி மறைந்தார். அவரது உடல் மறுநாள் 8-ம் தேதி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

வழக்கமாக, ஒரு சட்டப் பேரவை உறுப்பினர் மறைந்தால், அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அடுத்த 6 மாதங் களுக்குள் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும். அந்த வகையில் சமீபத் தில் திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ போஸ் மறைவைத் தொடர்ந்து, அந்த தொகுதி காலி யானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவைச் செயலக இணைய தளத்திலும் அந்த தொகுதியில், ‘VACANT’ என குறிப்பிடப்பட் டுள்ளது.

இந்நிலையில், திமுக தலைவர் மு.கருணாநிதி மறைவைக் குறிப் பிட்டு, அவர் போட்டியிட்டு வென்ற திருவாரூர் தொகுதியை காலியான தாக அறிவிக்க, தேர்தல் ஆணையத் திடம் அனுமதி கோரியது.

அனுமதிகிடைத்த நிலையில், திருவாரூர் தொகுதி காலி யானதாக அறிவிக்கை வெளியிடப் பட்டுள்ளதாக, சட்டப்பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரி வித்தன.

இருப்பினும், நேற்று மாலை வரை, சட்டப்பேரவைச் செயலக இணையதளத்தில் திருவாரூர் தொகுதி காலியானதாக அறிவிக் கப்படவில்லை.