திண்டுக்கல் அணி 172 ரன் குவிப்பு

0
0

டிஎன்பிஎல் தொடரில் ரூபி திருச்சி வாரியர்யஸ் அணிக்கு 173 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திண்டுக்கல் டிராகன்ஸ் அணி.

திருநெல்வேலி சங்கர் நகர் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது. ராமலிங்கம் ரோஹித் 30 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 46 ரன்களும், கேப்டன் அஸ்வின் 28 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 42 ரன்களும், ஹரி நிஷாந்த் 27 பந்துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 41 ரன்களும் விளாசினர். இதையடுத்து 173 ரன்கள் இலக்குடன் திருச்சி அணி பேட் செய்யத் தொடங்கியது.