திடிரென தெலுங்கு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த கமல்ஹாசன்! காரணம் இதுதான்…! | Kamalhasan went to Telugu biggboss house!

0
0

சென்னை: நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் 2 படத்தின் புரமோஷனுக்காக தெலுங்கு பிக்பாஸ் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இல்லாதவருக்கு ஒரு வீடு… இருக்கப்பட்டவருக்குப் பல வீடு என்பார்கள்… இது உலகநாயகனுக்கு சரியாக பொருந்தும் போல.

சினிமா, அரசியல், தொலைக்காட்சி என்று பல தளங்களில் பரபரப்பாக இயங்கிவருகிறார் கமல்ஹாசன். இவருடைய விஸ்வரூபம் 2 திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் ஊர் ஊராக பறந்து பறந்து படத்திற்கான புரோமோஷன் வேலைகளை கவனித்து வருகிறார். தமிழ் விஸ்வரூபம் 2 புரோமோஷனை பிக்பாஸ் வீட்டிற்குள் நடத்தினார். இந்தி புரமோஷனை சல்மான்கான் தொகுத்து வழங்கும் தஸ் கா தம் நிகழ்ச்சியில் செய்துள்ளார்.

இந்த நிலையில் இப்படத்தின் தெலுங்கு புரமோஷனுக்காக தெலுங்கு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார் கமல்ஹாசன். தெலுங்கில் 18 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது.

முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆர். தொகுத்து வழங்கிய நிலையில், இரண்டாவது சீசனை “நான் ஈ” புகழ் நானி தொகுத்து வழங்குகிறார். தெலுங்கு பிக்பாஸ் போட்டியாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் கமல்ஹசன்.

ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனத்தோடு ராஜ்கமல் பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் விஸ்வரூபம் 2 திரைப்படத்தை கமல்ஹாசன் இயக்கியுள்ளர். பூஜாகுமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.