தாய்லாந்தில் படகு கவிழ்ந்து விபத்து: சீன சுற்றுலா பயணிகள் 10 பேர் பலி

0
0

தாய்லாந்தில் படகு கவிழ்ந்து  விபத்துக்குள்ளானதில் சீன சுற்றுலா பயணிகள் 10 பேர் பலியாகியுள்ளனர். 45 பேர் மாயமாகியுள்ளனர்.

இதுகுறித்து கடற்படை அதிகாரி நரோங் அராபக்தி இன்று (வெள்ளிக்கிழமை) கூறும்போது, “தாய்லாந்தில் புக்கெட் தீவுப் பகுதியில்  வியாழக்கிழமை மாலை 105 பயணிகளுடன் சென்ற படகு அலைகளின் சீற்றத்தால் கவிழ்ந்தது. இதில் அந்த படகில் பயணித்த சீன சுற்றுலா பயணிகள்  10 பேர் பலியாகினர்.  45 பேர் மாயமாகினர். உயிரழந்தவர்களின் 10 பேர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பலர்உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த படகில் பயணித்த பிறரை தேடும் நடந்து வருகிறது”  என்று கூறியுள்ளது.

இந்த விபத்தைத் தொடர்ந்து சீன வெளியுறவு அமைச்சகத்தைச் சேர்ந்த பிரதி நிதிகள் தாய்லாந்து சென்றுள்ளனர். தாய்லாந்தில் கடந்த இரு வாரத்தில் ஏற்பட்ட மூன்றாவது  படகு விபத்து என்பது குறிப்பிடத்தக்கது.