தாய்ப்பால் கொடுக்கையில் ஏற்படும் முதுகு வலிக்கு என்ன காரணம்? எப்படி போக்குவது? | Tips for back pain relief while breastfeeding

0
1

பாதிப்புகள்!

தாய்ப்பால் சுரப்பு பல நன்மைகளை அளித்தாலும், ஒருசில குறைகளையும் பெண்களுக்கு அளிக்கிறது. பெண்ணின் மார்பகத்தில் பால் கட்டிக்கொள்வதால் பெரும் வலி உண்டாவது, மார்பக புற்றுநோய், மார்பக அழற்சி, நாள்பட்ட முதுகுவலி போன்ற குறைபாடுகளை பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பு பரிசாக அளிக்கிறது; இது அனைத்து பெண்களுக்கும் ஏற்படாது; பலவீனமான உடல் மற்றும் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கம் கொண்ட பெண்களுக்கு மட்டுமே ஏற்படும். இந்த பதிப்பில் தாய்ப்பால் சுரப்பால் ஏற்படும் நாள்பட்ட முதுகு வலிக்கான காரணங்கள் மற்றும் வலியை போக்க உதவும் நிவாரண குறிப்புகளை குறித்தும் பார்க்கலாம்.

காரணங்கள்

காரணங்கள்

பெண்ணில் பிரசவத்திற்கு பின், தாய்ப்பால் சுரப்பின் பொழுது முதுகு வலி ஏற்பட முக்கிய காரணங்களாக இருப்பவற்றை இங்கே காணலாம். கர்ப்பகாலத்தின் பொழுது கூடிய உடல் எடை முதுகு வாலியை உண்டாக்கலாம்; பிரசவத்தின் பொழுது நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையால் பெண்களுக்கு வலி ஏற்படலாம். முன்பு நடந்த விபத்துகளின் பொழுது முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயங்கள் தாய்ப்பால் சுரப்பின் ஹார்மோன் மாற்றங்களால் முதுகு வலியை ஏற்படுத்தி விடலாம்.

தாய்ப்பால் கொடுக்கும் பொழுது மேற்கொள்ளும் தவறான உட்காரும் முறை, அதாவது தவறான தாய்ப்பால் அளிக்கும் பொசிஷன் முதுகுவலியை ஏற்படுத்தலாம். தாய்ப்பால் கொடுக்கும் சமயங்களில் அதிகமான எடை கொண்ட பொருட்களை எடக்குமடக்காக தூக்குவதால், முதுகு வலி ஏற்படலாம்.

அடுத்தடுத்த பத்திகளில் முதுகுவலியை போக்குவதற்கான குறிப்புகளை பற்றி படிக்கலாம்.

சரியான பொசிஷன்

சரியான பொசிஷன்

குழந்தைக்கு பால் கொடுக்கும் பொழுது உங்களுக்கு வசதியாக இருக்கும் குழந்தைக்கும் வசதி அளிக்கும் ஒரு நிலையை தேர்ந்தெடுத்து, அந்த நிலையில் தாய்ப்பால் கொடுக்க முயல வேண்டும். மேலும் தாய்ப்பால் கொடுக்க உட்காரும் நாற்காலி அல்லது சோபா, மெத்தை சரியான அமைப்பை கொண்டதாகவும், தாய்ப்பால் கொடுப்பதற்கு வசதியாகவும் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் பொழுது முதுகிற்கு முட்டு கொடுக்க நல்ல அமைப்பு கொண்ட சரியான தலையணையை பயன்படுத்துதல் வேண்டும்.

நின்று கொடுக்கலாம்

நின்று கொடுக்கலாம்

நீண்ட நேரம் உட்காருவது கண்டிப்பாக முதுகு வலியை ஏற்படுத்தும்; முதுகு கூன் போடும் நிலைக்கு கூட போகலாம் அதாவது முதுகு வளைந்து விடலாம். எனவே, முதுகு வலி ஏற்படும் நேரங்களில் சற்று நேரம் நின்று கொண்டு பால் கொடுக்க முயற்சிக்கலாம். நின்று கொண்டு தாய்ப்பால் கொடுக்கும் பொழுது சற்று கவனமாக குழந்தையை பிடித்துக் கொள்ளல் வேண்டும்.

நடை மற்றும் உடற்பயிற்சி

நடை மற்றும் உடற்பயிற்சி

முதுகு வலி ஏற்பட்டால், நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்; நடக்கும் பொழுது முதுகு நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் முதுகு வலியை ஏற்படுத்தும் உடல் எடையை குறைக்க சரியம்னா உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்வதற்கென தினந்தோறும் சற்று நேரத்தை கண்டிப்பாக ஒதுக்க வேண்டும். இந்த பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன் மூலம், முதுகு வலியை எளிதில் போக்கி விடலாம்.

மசாஜ் மற்றும் ஒத்தடம்

மசாஜ் மற்றும் ஒத்தடம்

முதுகு வலி ஏற்படும் சமயங்களில் தேங்காய் எண்ணெயை காய்ச்சி, முதுகில் நன்கு மசாஜ் செய்து கொள்ள வேண்டும்; யாரையாவது மசாஜ் செய்துவிட சொல்வது மிகவும் நல்லது. மேலும் குளிர்ந்த நீர் அலல்து சூடு தண்ணீர் கொண்டு ஒத்தடம் செய்வதும் நல்ல பலனை தரும். எனவே தினசரி ஒரு ஒத்தட முறையை பின்பற்றலாம்; அல்லது நீங்கள் வசதியாக உணரும் ஒத்தட முறையை தொடர்ந்து பின்பற்றி வரலாம்.

தண்ணீர்

தண்ணீர்

உடலில் நீர்ச்சத்து குறைவதால் தசைகள் மற்றும் உடல் திசுக்களின் செயல்பாடு பாதிப்படையும். இதனால் உடலில் வலி மற்றும் வீக்கம் போன்றவை ஏற்படலாம். மேலும் நீங்கள் தாய்ப்பால் அளிப்பதால், உங்கள் உடலில் திரவம் – நீர்ச்சத்து அதிகம் வெளியாகிறது; அதை ஈடு செய்யும் அளவிற்கு போதுமான அளவு நீரை பருகி வருதல் வேண்டும். இது முதுகு வலியின் வீரியத்தை குறைக்க மிகவும் உதவும்.

உறக்கம் மற்றும் ஓய்வு!

உறக்கம் மற்றும் ஓய்வு!

சரியான உறக்க முறையை பின்பற்ற வேண்டும்; குழந்தையை கவனிக்கிறேன் என்ற பெயரில் உங்கள் உடல் நிலையை கெடுத்துக் கொள்ள கூடாது, நீங்கள் நலமாக இருந்தால் தான் குழந்தையை நலமாக பார்த்துக் கொள்ள முடியும் என்று உணருங்கள்! ஆகையால் முடிந்த அளவு கிடைக்கும் நேரங்களில் நன்கு ஓய்வு எடுங்கள். குழந்தை உறங்கும் நேரங்களில் நீங்களும் அதனுடன் சேர்ந்து உறங்கி ஓய்வு எடுக்க முயலுங்கள்! முதுகு வலி வந்த வழியில் தானாய் போய்விடும்.