தாத்தா ‘சீதக்காதி’யின் மேக்கிங் வீடியோ… சூப்பர் சிங்கரில் பாருங்க! | Making of Seethkaathi to be released on July 15th

0
0

சென்னை: விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பேசன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், உமேஷ், ஜெயராம் மற்றும் அருண் வைத்யநாதன் இணைந்து தயாரித்திருக்கும் படம் சீதக்காதி. நடுவுல சொஞ்சம் பக்கத்தை காணோம் திரைப்பட இயக்குனர் பாலாஜி தரணிதரன் இப்படத்தை இயக்ககியுள்ளார்.

வயதான கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு இது 25வது படம். எனவே இதனை சிறப்பான முறையில் விளம்பரப்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மூத்த நடிகை அர்ச்சனா இதில் நடித்திருக்கிறார். மகேந்திரன், பகவதி பெருமாள், ராஜ்குமார், பார்வதி நாயர், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் விஜய் சேதுபதியின் தோற்றம் மிக வித்தியாசமாக இருக்க வேண்டும் என நினைத்த படக்குழு, பிளானட் ஆப் தி ஏப்ஸ் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களுக்கு மேக்கப் மேனாக வேலை செய்த கேவின் ஹானேவை ஒப்பந்தம் செய்தது. அவரது ஆசோனையின் படி விஜய் சேதுபதியின் ஒப்பனை நடைபெற்றது.

இந்தியன் தாத்தாவையும், முதல்வன் ரகுவரனையும் சேர்த்து செய்த கலவை போல் காட்சியளிக்கிறார் விஜய் சேதுபதி. இந்த மேக்கப் போட சுமார் 4 மணி நேரம் ஆகும். அதன் மேக்கிங் வீடியோவை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை, 15ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியின் போது, மேக்கிங் ஆப் அய்யா… தி ஜர்னி எனும் அந்த வீடியோவை படக்குழு வெளியிடுகிறது. இதனை தயாரிப்பு நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.