தவறான நட்பால் ஏற்பட்ட மோதலில் இளைஞர் கொலை- தந்தை, மகன் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை; பெண்ணின் நண்பருக்கு 7 ஆண்டு சிறை

0
0

இளைஞர் கொலை வழக்கில் தந்தை, மகன் உள்ளிட்ட 3 பேருக்கு சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. எதிர் தரப்பை சேர்ந்த இருவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை வடபழனி பகுதியில் அச்சகம் நடத்திவருபவர் விஜய குமார். இவரது மனைவி கவுசல்யா வுக்கும் வடபழனி குமரன்காலனி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்ப வருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதை விஜயகுமார் கண்டித் தும் ராஜேஷ் கேட்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு விஜயகுமார் தனது மகன் அபிஷேக் (21), மாரி ஆகியோருடன் ராஜேஷின் வீட்டுக்கு சென்று வாக்குவாதம் செய்துள்ளார். அப் போது ஏற்பட்ட மோதலில், ராஜேஷின் சகோதரர் நாகேஸ்வர ராவ் உருட்டுக் கட்டையால் தாக்கப்பட்டு இறந்தார். இது தொடர்பாக வடபழனி போலீஸார் வழக்கு பதிவு செய்து, விஜய குமார், அபிஷேக், மாரி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

அதேபோல அபிஷேக்கை கத்தியால் குத்தியதாக ராஜேஷ், அவரது நண்பர் நாகராஜ் கைது செய்யப்பட்டனர்.

இந்த 2 வழக்குகளின் விசாரணை சென்னை 7-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் கே.செந்தில்குமார் ஆஜராகி வாதிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெ.சாந்தி, கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட விஜயகுமார், அவரது மகன் அபிஷேக், மாரி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.31 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அதேபோல, கொலை முயற்சி வழக்கில் ராஜேஷ், அவரது நண்பர் நாகராஜ் ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை, ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.