‘தளபதி’ படம் மாதிரி நான் நல்லாருக்கேனு கலைஞரே சொல்லுவார் பாருங்க : பார்த்திபன் | Parthiban visits Cauvery hospital

0
2

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம் பெறுவார் என காவிரி மருத்துவமனைக்குச் சென்ற நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

உடல்நலக் குறைபாடு காரணமாக கடந்த ஒரு வார காலமாக திமுக தலைவர் கருணாநிதி காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். தொடர் சிகிச்சையில் இருக்கும் அவரை கட்சித்தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் நேரில் பார்த்து நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று நடிகர் பார்த்திபன் காவிரி மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து நேரில் விசாரித்தார்.

தளபதி சீன்:

பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய பார்த்திபன், “தளபதி படத்தில் ரஜினிக்கு உடல் நிலை சரியில்லாமல் போகும். அப்போது அவரை பார்க்க மம்மூட்டி வருவார். அவரை பார்த்துவிட்டு வெளியில் வரும்போது அனைவரும் சூர்யா எப்படி இருக்கிறார் என்றுகேட்பார்கள்.

நம்பிக்கை:

நம்பிக்கை:

அதற்கு மம்மூட்டி அவர் நன்றாக இருக்கிறார் என்று கூறுவார். அதற்கு அனைவரும் மருத்துவர்தான் அவர் நன்றாக இருப்பதாக கூறினாரா என்று கேட்பார்கள் அதற்கு அவர் மருத்துவர் சொல்லவில்லை சூர்யாவே சொன்னார் என்று கூறுவார். அதுபோல கலைஞர் நன்றாக இருப்பதாக கலைஞரே கூறுவார்.

நான் ரசித்த மீம்ஸ்:

நான் ரசித்த மீம்ஸ்:

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது சமூகவலைதளங்களில் பல மீம்ஸ் வந்தது. அதில் கருணாநிதி அவர்கள் காவிரி மருத்துவமனைக்கு சான்றிதழ் தருவதுபோல ஓன்று வந்தது . அதை நான் அதிகமாக ரசித்தேன்.

தமிழ் கைவிடாது:

தமிழ் கைவிடாது:

கலைஞருக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் அவர் நலம் பெற வேண்டும் என்று பலர் கடவுளை வேண்டுகின்றனர். தமிழை நம்பினோரை என்றும் தமிழ் கைவிடாது” என இவ்வாறு அவர் தெரிவித்தார்.