‘தல போல வருமா’… அஜித்தை பாராட்டிய ரஜினி நாயகி! | Deepika Padukone praises Ajith simplicity

0
0

மும்பை: பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தல அஜித்தை தாறுமாறாக புகழ்ந்து தள்ளியுள்ளார்!

தல அஜித் என்றாலே மாஸ், சிம்பிளிசிட்டி, மனிதநேயம் என்று பலவிஷயங்கள் நியாபகத்திற்கு வரும். அஜித்துடன் பணியாற்றும் நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருமே அவரைப் புகழ புது அகராதி தேடுவார்கள்.

இப்போது, அந்த வரிசையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனும் இணைந்துள்ளார். அவர் இன்னும் ஒரு படி மேலே போய், அஜித் மட்டுமல்ல அவரின் ரசிகர்களும் நேர்மையானவர்கள் என புகழாரம் சூட்டியுள்ளார்.

தீபிகா:

சோஷியல் மீடியாவில் எப்போதும் எனர்ஜெடிக் பெண்ணாக இயங்கிக் கொண்டிருப்பவர் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பத்மாவதி திரைப்படம் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி, எதிர்ப்புகளை சம்பாதித்தது. ஆனாலும், தீபிகாவின் நடிப்பை ரசிகர்கள் வியந்து பாராட்டினர்.

3 அடி ஷாருக்:

3 அடி ஷாருக்:

தற்போது ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஷாருக்கான் மூன்று அடி உயர மனிதனாக நடிக்கும் ஸீரோ திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தில் சல்மான்கான், காத்ரினா கைப், அனுஷ்கா ஷர்மா, அபய் தியோல் என பாலிவுட் பட்டாளமே இருக்கிறது.

தீபிகா ரீ எண்ட்ரி:

தீபிகா ரீ எண்ட்ரி:

தீபிகாவை ட்ரிப்பிள் எக்ஸ் திரைப்படம் மூலம் ஹாலிவுட்டுக்கு அழைத்துச் சென்ற இயக்குனர் டி.ஜே குருசோ இயக்கத்தில் வெளிவர இருக்கும் ட்ரிப்பிள் எக்ஸ்-4 திரைப்படத்தின் நடிப்பதன் மூலம் ஹாலிவுட்டில் அடுத்த ரவுண்டுக்கு தயாராகிவிட்டார். அதோடு ஆறு பாலிவுட் படங்களும் இந்த ஆண்டு வெளிவர இ ுக்கின்றன.

சேகுவேரா:

தெலுங்கு நடிகர் பவண் கல்யாண், ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மியூசியத்தில் இருக்கும் சேகுவேராவின் சிலை அருகே அவருடைய மகள் நிற்கும் போட்டோவைப் பகிர்ந்து, கல்லூரிக் காலங்களில் சேகுவேரா பற்றி படித்து தெரிந்துகொண்டேன் என பெருமையாக ட்வீட் செய்துள்ளார். அதற்கு பவண் கல்யாண் மற்றும் அஜித்தை புகழ்ந்து தீபிகா படுகோன் ரீ ட்வீட் செய்துள்ளார்.

ஓபனிங் கிங்:

பெரிய புரோமோஷனோ, பெரிய இயக்குனர்களோ இல்லை. ஆனாலும் ஒவ்வொரு பட ரிலீளின் முதல் நாளிலும் வசூல் சாதனை படைக்கும் மன்னர்கள் என்று புகழ்ந்துள்ளார். மேலும், எப்போதுமே தங்களுடைய உண்மை முகத்தை மறைக்காமல், எளிமையாக இருந்து நேர்மையான ரசிகர்களைக் கொண்டுள்ளார்கள் எனவும், திரைவாழ்க்கையை விட, இவர்களின் நிஜ வாழ்க்கையை பார்த்து நேசிக்கும் ரசிகர்கள்தான் அதிகம் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.