தமிழ் பட இயக்குனர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார், அவர் பெயர்…: ஸ்ரீ ரெட்டி | Tamil director sexually harassed me: Sri Reddy

0
0

ஹைதராபாத்: தமிழ் பட இயக்குனர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தற்போது அதிகரித்துள்ளது என்று துணிச்சலாக தெரிவித்தவர் நடிகை ஸ்ரீ ரெட்டி.

மேலும் சில தெலுங்கு திரையுலக பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு அவர்கள் செய்த லீலைகளின் விபரங்களை தெரிவித்தார்.

தம்பி

நடிகர் ராணாவின் தம்பி அபிராம் தனக்கு பட வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி படுக்கையை பகிர்ந்ததாக ஸ்ரீ ரெட்டி புகார் தெரிவித்தார். மேலும் அபிராம் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டார்.

கோலிவுட்

கோலிவுட்

தமிழ் இயக்குனர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புது குண்டை தூக்கிப் போட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி. அந்த இயக்குனர் யார் என்ற விபரத்தை விரைவில் வெளியிடுவதாகவும் கூறியுள்ளார்.

யார் அது?

யார் அது?

ஸ்ரீ ரெட்டி யார் மீது குற்றம் சுமத்தினாலும் அதற்கான ஆதாரங்களையும் சேர்த்து வெளியிடுகிறார். அந்த தமிழ் இயக்குனர் யாராக இருக்கும் என்று ஆளாளுக்கு யூகிக்கத் துவங்கிவிட்டனர்.

ஸ்ரீ ரெட்டி

ஸ்ரீ ரெட்டி

தனக்கு நடந்த அந்த ஒரு சம்பவத்தை தவிர்த்து தமிழ் சினிமாவில் பெண்களை மரியாதையுடன் நடத்துவதாக ஸ்ரீ ரெட்டி கூறியுள்ளார். நான் விரைவில் தமிழ் படத்தில் நடிப்பேன், தமிழ் சினிமாவுக்காக என் வாழ்க்கையை அர்ப்பணிக்க தயார் என்கிறார் ஸ்ரீ ரெட்டி.