‘தமிழ் படம் 3’ நிச்சயம் வரும்: ஏன் என்றால்… | Tamizh Padam 3 will definitely come, because…

0
0

சென்னை: தமிழ் படத்தின் 3ம் பாகம் நிச்சயம்ம் வரும் என்று நம்ப ஒரு காரணம் உள்ளது.

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்த தமிழ் படம் 2 வியாழக்கிழமை ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ரஜினி, கமல் ரேஞ்சுக்கு காலை 5 மணி காட்சி எல்லாம் வைத்து அசத்தினார்கள்.

சூப்பர்

தமிழ் படம் 2 படத்தை பார்த்தவர்கள் அனைவரும் சூப்பர் என்று தெரிவித்துள்ளனர். பாரபட்சமில்லாமல் அனைவரையும் வச்சு செஞ்ச அமுதனுக்கு பாராட்டுக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது.

தமிழ் படம் 3

தமிழ் படம் 3

தமிழ் படம் 2 படத்தை பார்த்த கையோடு ஐயா ராசா அமுதா, 3வது பாகத்தை எடுத்து ரிலீஸ் பண்ணுங்க என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த அளவுக்கு இந்த படம் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.

முடிவு

முடிவு

பாகுபலி படத்தை முடித்த அதே காட்சியை வைத்து தான் தமிழ் படம் 2-ம் முடிக்கப்பட்டுள்ளது. அதாவது முதுகில் குத்தும் காட்சியுடன் தமிழ் படம் 2 முடிந்துள்ளது. இதன் மூலம் 3ம் பாகம் வரும் என்று சூசகமாக சொல்லியிருக்கிறாரா அமுதன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாகுபலி 2

பாகுபலி 2

பாகுபலி படம் கட்டப்பா பாகுபலியை குத்தியதோடு முடிந்தது. அதன் பிறகு பாகுபலி 2 வந்தது. அப்படி என்றால் அதே பாணியில் தமிழ் படம் 3 வருமா அமுதன்?

கலாய்

கலாய்

இதுவரை வந்த, வந்து கொண்டிருக்கும் படங்களை எல்லாம் வச்சு செஞ்சாச்சு. அமுதனுக்கு கொஞ்ச டைம் கொடுங்கப்பா, இனி வரும் படங்களை பார்த்து கலாய்க்க வேண்டாமா.