தமிழ் படம் 2: தலயை வச்சு செஞ்சிட்டாங்க! | Ajith targeted in Tamizh Padam 2

0
0

சென்னை: தமிழ் படம் 2 பார்த்த அஜித் ரசிகர்கள் படம் ரசிக்கும்படியாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.

அகில உலக சூப்பர் ஸ்டார் மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தமிழ் படம் 2. எந்த நடிகரையும், இயக்குனரையும் எந்த படத்தையுமே விட்டு வைக்காமல் தினம் தினம் போஸ்டர் போட்டு கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில், படம் ரிலீஸ் ஆனதும், 5 மணி காட்சியிலிருந்தே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஓபிஎஸ், ஈபிஎஸ், சசிகலா, கூவத்தூர் என சமீப காலங்களில் நாம் கடந்துவந்த அனைத்து அரசியல் விஷயங்களும் படத்தில் இருக்கின்றன என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு வேளை சிவா அரசியலில் குதித்தால் தங்களின் ஆதரவு நிச்சயம் இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

தசாவதாரம் திரைப்பட கமல்ஹாசனை விட அதிக கெட்டப் போட்டு அசத்தியுள்ளாராம் நடிகர் சதிஷ். மிர்ச்சி சிவாவை பொறுத்தவரை அவர் அகில உலக சூப்பர் ஸ்டார் என்பதால் பாட்டு, சண்டைக்காட்சிகள், ரொமான்ஸ் என பின்னி பெடல் எடுத்துள்ளார்.

பட ரிலீசுக்கு முன்புவரை, படத்தை வச்சு செய்ய வேண்டுமென திட்டமிட்டிருந்த அஜித் விஜய் ரசிகர்கள் இப்போது அதற்கான அவசியம் இல்லை என்கிறார்கள். பொதுவாக அஜித்தை கிண்டல் செய்தால் பொங்கி எழும் அவர்கள், இந்தபடத்தில் தலயைத்தான் நல்லா வச்சு செஞ்சிருகாங்க. ஆனாலும், அது ரசிக்கும்படியாக உள்ளது என சப்போர்ட் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.