“தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பரிசு கார்த்திக் நரேன்” – அரவிந்த் சாமி புகழாரம்

0
0

‘தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பரிசு கார்த்திக் நரேன்’ என அரவிந்த் சாமி தெரிவித்துள்ளார்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நரகாசூரன்’. அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கார்த்திக் நரேனே இந்தப் படத்தைத் தயாரிக்கவும் செய்துள்ளார்.

இதன் இசை வெளியீட்டு விழா, நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய அரவிந்த் சாமி, “இதுவொரு கார்த்திக் நரேன் படம். எல்லாருடைய வேலையையும் தெளிவாகத் திட்டமிட்டு, அனைவருக்கும் புரியவைத்து வேலை வாங்கியிருக்கிறார்.

அவர் எங்களுக்கு சொன்னதைத்தான் செய்திருக்கிறோம். அவர் சொன்னதைத் தாண்டி செய்வதற்கு அங்கு வேலை இல்லை. ‘தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பரிசு கார்த்திக் நரேன்’ என நான் பல இடங்களில் சொல்லியிருக்கிறேன். அந்தக் கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.

இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.