தமிழகத்தில் இசட் பிளஸ் பாதுகாப்பு முடிவுக்கு வந்தது

0
0

முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, மு.கருணாநிதிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங் கப்பட்டிருந்தது. அவர்கள் கால மானதைத் தொடர்ந்து அவை திரும்பப்பெறப்பட்டுள்ளன. தற்போது தமிழகத்தில் யாருக்கும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங் கப்படவில்லை என போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி முக்கிய தலைவர்களுக்கு இசட் பிளஸ், இசட், எக்ஸ், ஒய் ஆகிய பிரிவுகளின் கீழ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலை வர், பிரதமர், நீதிபதிகள், மத்திய அமைச்சர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

தவிர பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள தனி நபர்களுக்கும் அவர்கள் தகுதிக்கு ஏற்ப பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள், டெல்லி போலீஸார் அல்லது இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பாதுகாப்புப் பணிக்காக நியமிக்கப்படுவர்.

விடுதலைப் புலிகளின் அச் சுறுத்தல் காரணமாக தமிழக முன்னாள் முதல்வர்கள் ஜெய லலிதா, மு.கருணாநிதிக்கு மத்திய அரசின் ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. 2016-ல் ஜெயலலிதா காலமானதைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப் பட்டிருந்த ‘இசட்பிளஸ்’ பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், திமுக தலை வராக இருந்த மு.கருணாநிதி கடந்த 7-ம் தேதி மறைந்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப் பட்டிருந்த இசட் பிளஸ் பாது காப்பும் திரும்பப் பெறப்பட்டது.