தமிழகத்தின் கீர்த்தனா-னா சும்மாவா

0
33
சமீபத்தில் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வின் முடிவுகள் வெளிவந்தது. இந்த தேர்வில் பீகார் மாநிலத்தை சேர்ந்த கல்பனா குமாரி என்பவர் முதலிடம் பெற்றார். இவருக்கு இந்தியா முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்தது. அதே நேரத்தில் நீட் தேர்வில் தமிழகத்தை சேர்ந்த கீர்த்தனா இந்திய அளவில் 12வது இடத்தை பிடித்தார்.
இந்த நிலையில் ஜிப்மர் மருத்துவ கல்லூரிக்கான நுழைவுத்தேர்வின் முடிவுகள் நேற்று வெளியாகியது. இந்த தேர்வையும் நீட் தேர்வில் முதலிடம் பிடித்த கல்பனாகுமாரியும், நீட் தேர்வில் 12ஆம் இடத்தை பிடித்த கீர்த்தனாவும் எழுதியிருந்தனர். ஜிப்மர் நுழைவுத்தேர்வில் தமிழகத்தின் கீர்த்தனா 5வது இடத்தை பிடித்துள்ளார். ஆனால் இந்திய அளவில் நீட் தேர்வில் முதலிடம் பிடித்த கல்பனாகுமாரிக்கு 33வது இடம்தான் கிடைத்துள்ளது.
நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பிடித்தாலும் புதுவை ஜிப்மர் வைத்த நுழைவுத்தேர்வில் 33வது இடத்தில்தான் கல்பனாகுமாரியால் வர முடிந்துள்ளது என்பது, நீட் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டும் திறமையானவர் இல்லை என்பதை நிரூபித்துள்ளதாக சமூக வலைத்தள பயனாளிகள் கருத்து கூறி வருகின்றனர்.