தன் மகளை டேட்டிங் செய்ய ஷாருக்கான் கட்டளையிடும் விதிமுறை

0
43

மகளுக்கு 18 வயது ஆனதைத் தொடர்ந்து தன் மகளை டேட்டிங் செய்பவர்களுக்கு ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் விதித்திருக்கிறார் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.

பாலிவுட் பிரபலம் ஷாருக்கான் தன்னுடைய திரைப்படங்களுக்கு கொடுக்கிற அதே முக்கியத்துவத்தை தன் குடும்பத்திற்கும் கொடுக்கும் வழக்கமுடையவர். தன் பங்களிப்பை குடும்பத்திற்கு தவறாமல் கிடைக்கும்படி பார்த்துக் கொள்வார். இவரது மூன்று குழந்தைளான ஆர்யன், சுஹானா மற்றும் அப்ரம்வுடன் நேரம் செலவிடுவதை அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கிறார் ஷாருக்கான்.

குழந்தைகள் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கும் தந்தையைவிட அவர்களுக்கு எது வேண்டும் எதை தவிர்க்க வேண்டும் என்று உணர்த்தும் தந்தையாக இருக்கிறார் ஷாருக். இப்போதிருக்கும் குழந்தைகள் மொபைல் போனுக்கு அடிமையாகி கேம்ஸ்களில் மூழ்கி கிடக்கக்கூடாது என்று நினைத்த ஷாருக் மகன் அப்ராமின் ஐந்தாவது பிறந்தநாளின் போது அவருக்கு அவருக்கு ட்ரீ ஹவுஸை பரிசளித்தார்.

திரையில் கூலாக தெரியும் ஷாருக் குழந்தைகள் விஷயத்தில் மிகவும் ஸ்ட்ரிக்ட். ஷாருக்கின் மகள் சுஹானாவிற்கு தற்போது பதினெட்டு வயது பூர்த்தியாகியிருக்கிறது. இந்நிலையில் ஒரு பத்திரிக்கை பேட்டியின் போது சுஹானாவை டேட்டிங் செய்ய விரும்புபவர்களுக்கு கண்டிப்பான முறையில் தான் விதிக்கும் ரூல்ஸ் என்ன என்பதை விளக்கியிருக்கிறார்.

சுஹானாவை டேட்டிங் செய்ய விரும்பும் இளைஞன் இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் இது விளையாட்டிற்கு அல்ல என்றும் எச்சரித்திருக்கிறார் இந்த ஹீரோ!

உனக்கு என்று வேலை கண்டிப்பாக இருக்க வேண்டும். முதலில் படித்து உனக்கான கனவை அடைந்த பிறகு தான் காதல்,டேட்டிங் போன்ற விஷயத்திற்குள் உங்களின் கவனத்தை திருப்ப வேண்டும். அதை விடுத்து படிக்கும் போதே டேட்டிங் எல்லாம் நோ.

சுஹானாவை டேட்டிங் செய்வதற்கு முன்னால் உனக்கான கனவை,லட்சியத்தை அடைந்திருக்க வேண்டும்.

எக்காரணத்தை கொண்டு சுஹானாவை என்னை நீ காதலித்தாக வேண்டும் என்று வர்புறுத்தக்கூடாது. வேண்டாம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் அதை விட அந்த வார்த்தைகளை புரிந்து கொள்ள வேண்டும்.

டேட்டிங் செல்வது இருவருக்கும் விருப்பமானதாக இருக்கவேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன்.

ஒரு தந்தையாக எங்கும் இருப்பேன் என்பதை நீ மறந்துவிடக்கூடாது. சுஹானாவிற்கு எதிராக, அல்லது உங்களின் அன்பை சிறுமைபடுத்தும் விதமாக என்ன செய்தாலும் அதை தட்டிக் கேட்கும் உரிமை எனக்கு இருக்கிறது.

அதனால் தவறு செய்ய நினைக்கும் போதெல்லாம் எங்கும் நானிருப்பேன் என்பதை மறந்துவிட வேண்டாம்.

பணத்திற்காகவோ இப்போதிருக்கும் புகழுக்கோ மயங்காதவனாக இருக்கும். இவை இரண்டுமே எப்போது வேண்டுமானாலும் வரும் போகும். சுஹானாவின் அன்பினை மட்டும் விரும்புபவராக இருக்க வேண்டும்.

சுஹானாவை நீ டேட்டிங் செல்வதால் மட்டும் அவளை வென்றுவிட்டதாய் ஒரு போதும் நினைத்துவிடாதே…. ஏனென்றால் சுஹானா எப்போதுமே எனக்கு இளவரசி தான்.

இளவரசியை எப்படி நடத்த வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.

என் இளவரசிக்காக நான் சிறை செல்லவும் தயங்கமாட்டேன். ஒரு தந்தையாக என் குழந்தைகளுக்கு எல்லாமே சிறந்ததாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவற்றில் சிறு பிழை நடந்தால் கூட என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.

சுஹானாவிடம் நீ எது கொடுக்கிறாயோ அதையே நான் உனக்கு திருப்பிக் கொடுப்பேன். அவளிடம் அன்பும், சந்தோசத்தையும்,மரியாதையையும் கொடுத்தால் அதுவே உனக்கு கிடைக்கும்.

அவளை வருத்தப்படச் செய்தால் நீயும் வருத்தப்பட வேண்டியிருக்கும் என்பதை மறக்க வேண்டாம்.