தங்கையுடன் சேர்ந்து நிர்வாணமாக குளித்த நடிகை

0
102

தங்கையுடன் சேர்ந்து ஒரே குளியல் தொட்டியில் நிர்வாணமாக குளிப்பதில் தவறு இல்லை என்கிறார் நடிகை சாரா கான். இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் சாரா கான் தனது தங்கை அய்ரா கானுடன் இலங்கைக்கு சென்றுள்ளார். அங்கு சாரா குளியல் தொட்டியில் நிர்வாணமாக இருக்கும்போது அதை வீடியோ எடுத்துள்ளார் அய்ரா. வீடியோ எடுத்ததோடு மட்டும் அல்லாமல் அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுவிட்டார் அய்ரா கான். இது குறித்து சாரா கூறியிருப்பதாவது,

என் குளியல் வீடியோ வைரலானது குறித்து கேள்விப்பட்டேன். நான் என் குடும்பத்துடன் இலங்கைக்கு வந்துள்ளேன். தங்கையுடன் சேர்ந்து குளியல் தொட்டியில் நிர்வாணமாக இருப்பதில் தவறு இல்லை.

என் தங்கை அய்ரா தெரியாமல் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துவிட்டார். நாம் எல்லாம் மனிதர்கள். நம் வாழ்க்கையில் அனைவருமே தவறுகள் செய்துள்ளோம். நாம் செய்தது தவறு என்பது தெரிந்தவுடன் அதை திருத்திக் கொள்கிறோம்.

வீடியோ வைரலானதால் வரும் பின்விளைவுகளை நினைத்து பயம் இல்லை. இந்த வீடியோ யார் மனதையும் புன்படுத்தவில்லை. வீடியோவை பார்த்துவிட்டு என் பெற்றோர் எனக்கு போன் செய்யவில்லை. என்னை பற்றி அவர்களுக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களும் நன்கு தெரியும்.

இந்த ஒரு வீடியோவை வைத்து நான் மோசமானவள் என்று என் பெற்றோர், நண்பர்கள், ரசிகர்கள் முடிவு செய்ய மாட்டார்கள். பப்ளிசிட்டிக்காக இதை நான் செய்யவில்லை என்று சாரா தெரிவித்துள்ளார்.

அக்காவும், தங்கையும் வெட்கம் இல்லாமல் இப்படியா சேர்ந்து நிர்வாணமாக ஒரே குளியல் தொட்டியில் குளிப்பது என்று அந்த வைரல் வீடியோவை பார்த்தவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.