டீசரில் கலக்கிய விஜய் சேதுபதியின் ‘ஜுங்கா’ 27ம் தேதி ரிலீஸ் | Junga release date out!

0
0

சென்னை: கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ஜுங்கா திரைப்படம் இம்மாதம் 27ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் திரைப்படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர இருக்கும் கேங்ஸ்டர் நகைச்சுவைத் திரைப்படம் ஜுங்கா.

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வனமகன் புகழ் சாயிஷா சாகல் நடித்துள்ளார். காதலும் கடந்துபோகும், கவண் ஆகிய படங்களில் நடித்த மடோனா செபாஸ்டின் நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, சுரேஷ் சந்திரா மேனன், ராதாரவி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் அவரே தயாரித்துள்ளார். சித்தார்த் விப்பின் இசையில் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. டூட்லே ஒளிப்பதிவு செய்துள்ளார், விஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார்.

ரவுத்திரம் திரைப்பட இயக்குனர் கோகுல் இயக்கியிருக்கும் இத்திரைப்படம் ஜூலை 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.