டி20 போட்டி: தோனிக்கு மறக்க முடியாத போட்டியாக நாளை அமையுமா?

0
0

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான மகேந்திர சிங் தோனி நாளைப் பங்கேற்கும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டி அவருக்குச் சர்வதேச அளவில் 500-வது போட்டியாக அமைகிறது.

இந்திய அணியில் இன்று தவிர்க்க முடியாத சக்தியாக, பேட்ஸ்மேனாக இருந்து வருபவர் ‘மகி’ என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி.

கடந்த 2004-ம் ஆண்டு, டிசம்பர் 23-ம் தேதி சிட்டகாங்கில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் எம்எஸ். தோனி அறிமுகமாகினார். தொடக்கத்தில் நீண்டமுடியையும், 7-வது வீரராகவும் களமிறக்கப்பட்ட தோனிக்கு, இந்தியாவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிதான் திருப்புமுனையாக அமைந்தது. விசாகப்பட்டணித்தில் கடந்த 2004-ம் ஆண்டு நடந்த பாகிஸ்தானுக்கு எதிராக அவர் அடித்த 148 ரன்கள் அனைவரையும் வியந்து பார்க்க வைத்துவிட்டது.

தோனி

 

அதன்பின் ஒருநாள் போட்டியில் அவரின் ஒவ்வொரு ஆட்டமும் முத்திரை பதிக்கும் விதத்தில்தான் அமைந்து. குறிப்பாக 2005-ம் ஆண்டு ஜெய்பபூரில் இலங்கைக்கு எதிராக 183 ரன்கள் குவித்தது, பாகிஸ்தான் பயணத்தில் பைசாலாபாத்தில் 148 ரன்கள் சேர்த்தது ஆகியவை தோனியின் புகழகை உச்சத்துக்குக் கொண்டு சென்றது.

இந்திய அணி பல்வேறு போட்டிகளில் வெற்றிக்குக் கடைசி நேரத்தில் தடுமாறும் போது, இக்கட்டான தருணத்தில் நின்று அணிக்கு பல்வேறு வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளார் தோனி என்பது மிகையல்ல. இந்திய அணிக்கு தோனி தலைமை ஏற்றபின் டி20 உலகக்கோப்பை, உலகக்கோப்பைப் போட்டி, சாம்பிய்ஸ் டிராபி என பல்வேறு முக்கிய கோப்பைகளை வென்றுள்ளது.

இதுவரை 318 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள தோனி, 9,967 ரன்கள் சேர்த்துள்ளார். 10 ஆயிரம் ரன்கள் அடிக்க இன்னும் 33 ரன்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. இதில் 10 சதங்கள், 67 அரைசதங்கள் அடங்கும்.

 

போட்டிகள் என எடுத்துக்கொண்டால், 90 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 4,876 ரன்கள் குவித்துள்ளார். இதில் 6 சதங்கள்,33 அரைசதங்கள் அடங்கும். கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி ஆகஸ்திரேலியாவில் நடந்த போட்டியோடு தோனி போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

அதன்பின் ஒருநாள் மட்டும், டி20 போட்டிகளிலும் மட்டுமே விளையாடி வருகிறார். இதுவரை 91 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, 1,455 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 2 அரைசதங்கள் அடங்கும்.

ஒட்டுமொத்தமாக டி20, ஒருநாள் மற்றும் போட்டிகள் என 499 போட்டிகளில் தோனி பங்கேற்றுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக நாளை கார்டிப் நகரில் நடக்கும் 2-வது டி20 போட்டி தோனிக்கு சர்வதேச அளவில் 500-வது போட்டியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் போட்டிக்கு பின் தோனி அயர்லாந்துடனான டி20 போட்டியில் பங்கேற்றபோதிலும், அதில் சிறப்பாக விளையாடவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 போட்டியிலும் தோனி பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. நாளை நடக்கும் போட்டியில் பேட்டிங்கில் முன்வரிசையில் இறங்க வாய்ப்பு கிடைத்தால், அவரின் பேட்டிங் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.