டி20 போட்டி: டாஸ் வென்றது இந்திய அணி; 2 மாற்றங்கள்: இங்கிலாந்து அணியில் ஒரு மாற்றம்

0
0

பிரிஸ்டல் நகரில் இன்னும் சிறிது நேரத்தில் தொடங்க உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது.

இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் போட்டி, 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதலாவது போட்டியில் இந்திய அணி வென்றது, 2-வது போட்டியில் இங்கிலாந்து வென்றது. இதனால், 1-1 என்ற சமநிலையுடன் இரு அணிகளும் உள்ளதால். இன்றைய இறுதிப்போட்டி விறுவிறுப்பை எட்டியுள்ளது.

2-வது போட்டியில் இரு சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கிய இந்திய அணி இந்தப் போட்டியில் யஜுவேந்திர சாஹலுக்கு மட்டும் வாய்ப்புக் கொடுத்து குல்தீப் யாதவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்குபதிலாக சென்னை சூப்பர் சிங்ஸ் வீரர் தீபக் சாஹர் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த 2-வது போட்டியில் புவனேஷ் குமார் காயம் அடைந்ததால், அவருக்கு பதிலாக சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆகவே, இந்தப் போட்டியில் இந்தியஅணி தீபக் சாஹர், சித்தார்த் கவுல், உமேஷ்யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகிய 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது. ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக புற்கள் நிறைந்து கடினமாக இருக்கிறது என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

அதேபோல இங்கிலாந்து அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியில் ஜோய் ரூட்டுக்கு பதிலாக ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி விவரம்:

ரோகித் சர்மா, ஷிகர் தவண், கேஎல் ராகுல், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, தோனி, ஹர்திக் பாண்டியா, சாஹல், தீபக் சாஹர், சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்