டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபடும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் டி.ஜெயக்குமார் உறுதி

0
0

சட்டப்பேரவையில் நேற்று பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் கே.என்.நேரு பேசும்போது,‘‘ டிஎன்பிஎஸ்சி நிறுவனம் சிறப்பாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற 74 பேரில் 62 பேர் குறிப்பிட்ட இரு நிறுவனங்களில் பயிற்சி பெற்றவர்கள் என்றும், இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. இதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?’’ என்றார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் டி.ஜெயக்குமார் பேசியதாவது:

டிஎன்பிஎஸ்சியில் கடந்த 2014-15-ம் ஆண்டு காலிப்பணியிடங்கள் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட குருப் 1 தேர்வில், எழுத்துத் தேர்வு, நேர்காணல் முடிக்கப்பட்டு, 2016-ல் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பத்திரிகை, டிவியில் செய்தி வந்தது. அவ்வாறு எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், முறைகேடுகள் நடந்துள்ளதா என்பதை விசாரிக்க, காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. புகார் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து, டிஎன்பிஎஸ்சியில் பணியாற்றிய 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் மேலும், குடிமைப்பணிகள் தேர்வுக்கான அரசு பயிற்சி மையம் சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வருகிறது. அந்த மையத்தில் 255 பேர் தங்கி பயின்று வருகின்றனர். 3 பேர் வெளியில் இருந்து பயில்கின்றனர். இங்கு பயின்று தேர்ச்சி பெறுவோரின் பட்டியலை எடுத்துக்கொண்டு, தங்கள் நிறுவனத்தில் பயின்றதாக சில தனியார் பயிற்சி நிறுவனங்கள் ‘பில்டப்’ செய்து வருகின்றன. இதுபோன்று தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவது எந்த நிறுவனமாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.