டார்ஜிலிங் டூ மதுரை… புதிய களம் தேடி புறப்படும் ரஜினி படக்குழு! | Rajinikanth movie shot will be in Madurai?

0
0

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நடக்க உள்ளதாக தகவல்.

நடிகர் ரஜினிகாந்த தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மேகா ஆகாஷ் பாபி சிம்ஹா உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இப்போது மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நடைபெற்று வருகிறது. டார்ஜிலிங்கில் ஷூட் முடிந்தவுடன் படக்குழு மதுரை செல்கிறது. அதனால் அடுத்தகட்ட படப்பிடிப்பு மதுரையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ் இயக்கம், அனிருத் இசை, சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என்பதால் பொதுவாக ரஜினி படங்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பை விட இந்தபடத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.