ஜேம்ஸ்பாண்ட் பட நாயகி யுனிஸ் கெய்ஷன் மரணம்

0
20

புகழ்பெற்ற ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தின் முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்த யுனிஸ் கெய்ஷன் நேற்று மரணமடைந்தார். அவருடைய மரணத்திற்கு ஹாலிவுட் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். புகழ்பெற்ற துப்பறியும் கதையம்சம் கொண்ட, ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் பெரும் ரசிகர்கள் உண்டு. அதேபோல், அந்த திரைப்படத்தின் கதாநாயகிகளுக்கும் பெரும் வரவேற்பு உண்டு.

அந்த வகையில், சீன் கானரி நடித்து 1962ம் ஆண்டு வெளியான முதல் ஜேம்ஸ்பாண்ட் திரைப்படமான டாக்டர் நோ-வில் கதாநாயகியாக நடித்த யுனிஸ் கெய்ஷன் நேற்று காலமானார். இவருக்கு வயது 90. முதல் பாகம் மட்டுமன்றி, அடுத்த பாகமான ஃபிரம் ரஷ்யா வித் லவ் திரைப்படத்திலும் இவரே நாயகியாக நடித்திருந்தார். ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தில் இவரது கதாப்பாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே போல், ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தில் மிகவும் புகழ்பெற்ற ‘பாண்ட்…. ஜேம்ஸ்பாண்ட்’ என்கிற சொல்லாடலும் இவராலேயே பிரபலம் ஆனது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த யுனிஸ் கெய்ஷன் நேற்று காலமானார். இவரது உடலுக்கு ஹாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தினர்.