ஜெயலலிதா, சசிகலாவிற்கு துரோகம் செய்தவர்கள் யார் தெரியுமா

0
28

ஜெயலலிதா, சசிகலாவிற்கு துரோகம் செய்த இந்த ஆட்சியாளர்கள் தமிழக மக்களுக்கு மட்டும் வேறு என்ன செய்து விடப்போகிறார்கள் என்று அமமுக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் இன்று காலை மன்னார்குடியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழக அரசின் செயல்பாடுகள் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் இல்லை. தமிழர்களுக்கு இந்த ஆட்சியாளர்கள் துரோகம் இழைத்துவிட்டார்கள் . தாங்கள் ஆட்சியில் அமரக் காரணமான ஜெயலலிதா, சசிகலாவிற்கே துரோகம் செய்த இவர்கள் தமிழக மக்களுக்கு மட்டும் என்ன புதிதாக செய்துவிடப்போகிறார்கள். விரைவில் எடப்பாடி ஆட்சி தமிழகத்தில் இருந்து அகற்றப்படும். 110 விதியின் கீழ் பல நலத்திட்டங்களை அறிவித்தவர் ஜெயலலிதா. ஆனால், அவரது ஆட்சி என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் காவிியில் நீரை திறந்துவிடமுடியாது என்று அதே விதியின் கீழ் அறிவிப்பது மிகவும் மோசமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.