ஜுலை 12 ஆம் தேதி தமிழ்ப்படம் 2 ரிலீஸ் ஆகிறதா? | Tamilpadam 2 release date announced?

0
0

சென்னை: மிர்ச்சி சிவாவின் தமிழ்ப்படம் 2 ஜூலை 12 ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

2011 நம்ம கையில… என்ற பாடல் வரியோடு 2010ல் வெளியான திரைப்படம் தமிழ்ப்படம். தமிழ் சினிமாவின் மொத்த வரலாறையுமே அடித்து துவைத்து காயப்போட்டு பரபரப்பை கிளப்பியது.

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்து வெளிவந்த இந்த திரைப்படத்தின் அடுத்த பாகம் வருமா என்று ஏங்கிய ரசிகர்களுக்காகவே, இப்போது இரண்டாம் பாகம் “தமிழ்ப்படம் 2” என்ற பெயரில் தயாராகியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி முன்பு சிவா அமர்ந்து தியானம் பண்ணுவதுபோல் வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலிருந்து இந்த படத்தின் வெற்றி துவங்கியுள்ளதாக எடுத்துக்கொள்ளலாம்.

Basically I am a watch mechanic என்று எழுதப்பட்ட அட்டை மேசை மீது இருக்கும்போதே 24 படத்தின் சூர்யா போன்று ஒருவர் பேசிக்கலி ஐம் எ வாட்ச் மெக்கானிக் என்று சிவாவிடம் அறிமுகம் செய்யும் காட்சியோடு துவங்கும் புதிய வீடியோவும் டிரெண்ட் ஆகியுள்ளது.

பாகுபலி, காலா என்று பல படங்களின் போஸ்டர்களை ஸ்பூப் செய்ததன் மூலம் சி.எஸ். அமுதனின் படக்குழு கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில் சி.எஸ் அமுதன் மற்றும் தயாரிப்பாளர் சஷிகாந்த்தின் ட்விட்டர் உரையாடல்கள் பட ரிலீசுகான முன்னோட்டமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

ட்விட்டரில் சி.எஸ் அமுதன், 12 ஆம் தேதி என்ன திட்டம் என்று கேட்க, அதற்கு நான் ப்ரீயாக இருக்கிறேன் உங்களுக்கு படத்திற்கு போக விருப்பமா என சஷிகாந்த் கேட்கிறார். எதாவது சுவாராஸ்யமாக போகிறதா என அமுதன் செய்யும் ரிப்ளைக்கு, சுவாரஸ்யமாக ஒன்று வரப்போகிறது… பார்க்கலாம் என பதிலளித்துள்ளார்.

இதனடிப்படையில் பார்க்கும்போது ஜூலை 12 பட ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.