ஜுங்கா ரிலீஸான கையோடு தாய்லாந்துக்கு பறக்கும் விஜய் சேதுபதி | Vijay Sethupathi goes to Thailand

0
0

சென்னை: புதுப்படத்திற்காக விஜய் சேதுபதி, அஞ்சலி உள்ளிட்டோர் தாய்லாந்து செல்ல உள்ளார்கள்.

இந்த மூஞ்சிய எல்லாம் யாருக்கு பிடிக்கும் என்று கேட்ட விஜய் சேதுபதி தான் தற்போது கோலிவுட்டின் பிசியான ஹீரோக்களில் ஒருவர். பெரிய ஹீரோவாக ஆகிவிட்டதால் வில்லனாக நடிக்க மாட்டேன் என்றெல்லாம் அடம் பிடிக்காதவர்.

அவர் தற்போது அருண் குமார் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

விஜய் சேதுபதி

பண்ணையாரும் பத்மினியும் படத்தை அடுத்து அருண் குமார், விஜய் சேதுபதி இந்த புதுப்படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார்.

தாய்லாந்து

தாய்லாந்து

படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மே மாதத்தில் தென்காசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்தது. இந்நிலையில் படத்தின் மீதமுள்ள காட்சிகளை படமாக்க தாய்லாந்து செல்ல திட்டமிட்டுள்ளார்கள்.

ஆகஸ்ட்

ஆகஸ்ட்

விஜய் சேதுபதி கஞ்ச டானாக நடித்துள்ள ஜுங்கா படம் இந்த மாத இறுதியில் ரிலீஸாக உள்ளது. விஜய் சேதுபதி தயாரித்து, நடித்துள்ள ஜுங்கா ரிலீஸானதும் அருண் குமார் படத்திற்காக படக்குழு தாய்லாந்து செல்கிறதாம்.

தமிழ்

தமிழ்

தமிழிலேயே மூச்சுவிட நேரம் இல்லாமல் அத்தனை படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில் அவர் கன்னட படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார். இதன் மூலம் கன்னட திரையுலகில் அவர் அறிமுகமாக உள்ளார்.