ஜியோவாசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம் எப்படி தெரியுமா

0
40

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ அதன் ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்த வாய்ப்பானது, (திட்டத்திற்கு ஏற்றபடி) நாள் ஒன்றிற்கு கிடைக்கும் டேட்டா நன்மையுடன் சேர்த்து கூடுதலாக 1.5ஜிபி டேட்டாவை தினசரி அடிப்படையில் குறிப்பிட்ட காலம் வழங்கும்.

ஆமாம், நீங்கள் படித்தது சரி தான். தினமும் கூடுதலாக 1.5ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த புதிய வாய்ப்பைக் கொண்டு, ஜியோவ இந்த 1ஜிபி அளவிலான 4ஜி தரவின் மதிப்பானது ரூ.1.77 /-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதை பெறுவது எப்படி.?

ரிலையன்ஸ் ஜியோவின் நுழைவு-நிலை திட்டமான ரூ.149/- திட்டமானது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் ஒரு திட்டமாகும். அது ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இதன் வழியாகத்தான் ஜியோவின் 1 ஜிபி தரவு மதிப்பு ரூ.1.77/- ஆக குறைந்துள்ளது. இருப்பினும், இது நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட கால வாய்ப்பாகும், அதாவது ஜூன் 12 முதல் ஜூன் 30 வரை மட்டுமே ரீசார்ஜ் செய்ய நீடிக்கும்.

எந்தெந்த திட்டங்கள்.?

இந்த வாய்ப்பானது ரிலையன்ஸ் ஜியோவின் நுழைவு-நிலை திட்டமான ரூ.149/- தொடங்கி ரூ.799/- திட்டம் வரை அணுக கிடைக்கும். எடுத்துக்காட்டிற்கு ரூ.149/ திட்டமானது மொத்தம் 28 நாட்களுக்கு 1.5ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கி வந்தது. தற்போது ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். இதன் வழியாகத்தான் ஜியோவின் 1 ஜிபி தரவு மதிப்பு ரூ.1.77/- ஆக குறைந்துள்ளது.

1.5 ஜிபிக்கு பதிலாக முறையே 3 ஜிபி.!

இருப்பினும், இது நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட கால வாய்ப்பாகும், அதாவது ஜூன் 12 முதல் ஜூன் 30 வரை மட்டுமே – இந்த நன்மைகளை அடக்கிய – ரீசார்ஜ் செய்ய நீடிக்கும். வேறென்ன திட்டங்கள் இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது என்று கேட்டால் நிறுவனத்தின், 1.5ஜிபி டேட்டா திட்டங்களான ரூ.149, ரூ.349, ரூ.399 மற்றும் ரூ.449/- ஆகியவைகள் தற்போது ரீசார்ஜ் செய்ய 3ஜிபி வழங்கும்.

2 ஜிபிக்கு பதிலாக முறையே 3.5 ஜிபி.!
4ஜிபி மற்றும் 5ஜிபிக்கு பதிலாக முறையே 5.5 ஜிபி மற்றும் 6.5 ஜிபி.!

அதிகபட்ச டேட்டா நன்மைகளை வழங்கும் திட்டங்களான ரூ.509 மற்றும் ரூ.799 திட்டம் இப்போது 4ஜிபி மற்றும் 5ஜிபிக்கு பதிலாக முறையே 5.5 ஜிபி மற்றும் 6.5 ஜிபி-ஐ வழங்கும். மேற்கூறப்பட்ட அனைத்து திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பதை குறிப்பு செய்யுங்கள்.

ரூ.100/- கேஷ்பேக்.?!