ஜம்முவில் தீவிரவாதி சுட்டுக்கொலை – இந்து தமிழ் திசை

0
0

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹண்ட்வாரா வனப்பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், அந்த வனப்பகுதியில் ராணுவத்தினர் நேற்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள், ராணுவத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ராணுவத்தினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணிநேரம் நடைபெற்ற இந்தத் துப்பாக்கிச் சண்டையில், தீவிரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்ற தீவிரவாதிகள் தப்பியோடிவிட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதி எந்த அமைப்பைச் சேர்ந்தவர் என்பது குறித்து ராணுவத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பியோடிய தீவிரவாதிகளை தேடும் பணியிலும் ராணுவ வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.