சொய்ங்.. சொய்ங்.. கும்கி 2வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘உன்னி கிருஷ்ணன்’ | Kumki 2 official announcement

0
0

எதிர்பார்ப்பு:

கும்கி படத்தில் விக்ரம் பிரபு மற்றும் லட்சுமிமேனனின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. எனவே இரண்டாம் பாகத்திலும் அவர்களே நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இது தொடர்பாக பல்வேறு வதந்திகளும் உலா வந்தன.

மதியழகன்:

மதியழகன்:

இந்நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கும்கி 2 படக்குழு பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார். வில்லனாக ஹரிஷ் பெராடி நடிக்கிறார்.

யானை:

யானை:

இவர்கள் தவிர, ஆர்.ஜே.பாலாஜி, சூசன், ‘கோலங்கள்’ திருச்செல்வம், ஸ்ரீநாத், ஆகாஷ், மாஸ்டர் ரோகன், மாஸ்டர் ஜோஸ்வா, பேபி மானஸ்வி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் ‘உன்னிகிருஷ்ணன்’ என்ற யானை நடித்து வருகிறது.

நிவேதா பெத்துராஜ்:

நிவேதா பெத்துராஜ்:

நாயகி மட்டும் இன்னும் முடிவாகவில்லை எனப் படக்குழு தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவு:

ஒளிப்பதிவு:

இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சுகுமார், இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, படத்தொகுப்பாளராகப் புவன், கலை இயக்குநராகத் தென்னரசு, சண்டைக்காட்சிகளை ஸ்டன்ட் சிவா ஆகியோர் கவனித்துக் கொள்கின்றனர்.

இதயக்கனி:

இதயக்கனி:

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மைசூர் அருகே உள்ள சிவ சமுத்திரம் அருவியில் நடைபெற்று வருகிறது. எம்.ஜி.ஆர் நடித்த ‘இதயக்கனி’ படப்பிடிப்பிற்குப் பிறகு ‘கும்கி 2′ படப்பிடிப்பு தான் இங்கு நடைபெறுகிறது.

நாயகி இல்லாத காட்சிகள்:

நாயகி இல்லாத காட்சிகள்:

முதல் பாகத்தைப் போலவே இப்படத்திலும் நாயகிக்கு மிகவும் முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரமாம். எனவே, கதைக்கு பொருத்தமான நாயகியைத் தீவிரமாகத் தேடிக் கொண்டிருக்கிறது படக்குழு. தற்போது நாயகி இல்லாத காட்சிகளாக படமாக்கி வருகின்றனர்.