சென்னை, டெல்லி உள்ளிட்ட 8 நகரங்களில் பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ.2,919 கோடி நிதி: மத்திய அரசு ஒப்புதல்

0
0

சென்னை, டெல்லி, மும்பை உட்பட நாட்டின் 8 முக்கிய நகரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர் பான திட்டங்களுக்காக ரூ.2,919 கோடியை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டில் பெண்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக் கைகள் குறித்து மக்களவையில் நேற்று கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து மத்திய பெண் கள் மற்றும் குழந்தைகள் மேம் பாட்டுத் துறை இணையமைச்சர் வீரேந்திர குமார் பேசியதாவது:

நாடு முழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகை யில், டெல்லி, மும்பை, கொல் கத்தா, சென்னை, அகமதாபாத், பெங்களூரு, ஹைதராபாத், லக்னோ ஆகிய 8 முக்கிய நகரங் களில் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை மத்திய அரசு செயல் படுத்தவுள்ளது. இத்திட்டங்களுக் காக மொத்தம் ரூ.2,919 கோடியை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் இத்திட் டங்களை செயல்படுத்துவதற்காக ரூ.663.67 கோடி நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அதன்படி, மக்கள் அதிகம் கூடும் இடங்கள் வீடியோ கண்காணிப்பின்கீழ் கொண்டு வரப்படவுள்ளன. அதுதவிர, முகங் களைக் கொண்டு அவரது தனிப்பட்ட விவரங்களைக் கண்டறிதல், ஜிபிஎஸ் துணையுடன் தனிநபர்களைக் கண்காணித்தல், வாகன எண்களைத் தாமாக சரி பார்த்தல் உள்ளிட்ட நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படவுள் ளன.

மும்பையைப் பொறுத்தவரை, இத்திட்டத்துக்காக ரூ.252 கோடி செலவிடப்படவுள்ளது. குற்றம் நடைபெறும் இடங்களை ‘ஜிஐஎஸ் மேப்பிங்’ தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்டறிதல், முக்கிய இடங்களை வீடியோ கண்காணிப்பின்கீழ் கொண்டு வருதல், குற்றப்பிரிவு விசாரணை அதிகாரிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்புப் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட அம்சங்கள் இங்கு செயல்படுத்தப்படவுள்ளன.

சென்னையைப் பொறுத்தவரை, இத்திட்டத்துக்காக ரூ.425 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது. குற்றங் களைத் தடுக்க ‘ஜிஐஎஸ் மேப்பிங்’ தொழில்நுட்பங்களைப் பயன்படுத் துதல், அரசு போக்குவரத்து வாக னங்களில் கூடுதல் போலீஸாரை நியமித்தல், பெண்களுக்கு சுகா தார வசதிகளை ஏற்படுத்தித் தருதல், போலீஸாருக்கு திறன் மேம்பாடு பயிற்சி அளித்தல் ஆகிய அம்சங்கள் இத்திட்டத்தில் உள்ளன. இதேபோன்று, மீதமுள்ள 5 நகரங்களிலும் பாதுகாப்பு தொடர்பான அம்சங்கள் செயல்படுத்தபட இருக்கின்றன. இவ்வாறு வீரேந்திர குமார் தெரிவித்தார்.