சென்னை கடற்கரை – தாம்பரம் தடத்தில் இன்றும் நாளையும் 9 மின்சார ரயில்கள் ரத்து

0
0

சென்னை எழும்பூர் ரயில் நிலை யத்தில் இன்றும், நாளையும் (4, 5-ம் தேதிகளில்) நடைமேம்  பாலப் பணிகள் நடக்கவுள்ளன. இதனால், சென்னை கடற்கரை – தாம்பரம் தடத்தில் 9 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைமேம்பாலம் அமைக்கும் பணி நடக்கவுள்ளதால், இன்றும், நாளையும் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு தடத்தில் மின்சார ரயில்களின் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு – கடற்கரைக்கு அதிகாலை 3.55, இரவு 10.15, 11.10 மணி மின்சார ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். இதேபோல், கடற்கரை – செங்கல்பட்டுக்கு அதிகாலை 3.55 மணிக்கு இயக்க வேண்டிய ரயில் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு இயக்கப்படும். மேலும், தாம்பரம் – சென்னை கடற்கரைக்கு இரவு 11.30 மற்றும் கடற்கரை – தாம்பரத்துக்கு இரவு 11.05, 11.30, 11.59 மணிக்கு இயக்கப்படும். மின்சார ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. தாம்பரம் – கடற்கரை தடத்தில் இரவு 10.45 மணிக்குப் பிறகு மின்சார ரயில்களின் சேவையே இருக்காது.

சென்னை கடற்கரை – செங்கல்பட்டுக்கு அதிகாலை 3.55, 4.40,5 மணி மின்சார ரயில்கள் தாம்பரத்தில் இருந்து செங்கல்பட் டுக்கு இயக்கப்படும். கடற்கரை – தாம்பரத்துக்கு அதிகாலை 4.15 மணி மற்றும் தாம்பரம் – கடற் கரைக்கு அதிகாலை 4, 4.20, 4.40, 5.15 மணி இயக்கப்படும் மின்சார ரயில்களின் சேவை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. இவ் வாறு அதில் கூறப்பட்டுள்ளது.