செங்கல்பட்டு அருகே லேசான நிலநடுக்கம்: வீட்டைவிட்டு வீதிக்கு ஓடி வந்த பொதுமக்கள்

0
0

செங்கல்பட்டு அருகே மகேந்திரா சிட்டி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கிராமங்களில் இருந்த பொதுமக் கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி வீதிக்கு வந்தனர்.

செங்கல்பட்டு அருகே உள்ள வீராபுரம், அஞ்சூர், ஈச்சங் கரணை, குண்ணவாக்கம், அனுமந்தை ஆகிய கிராமப் பகுதிகளில் மகேந்திரா சிட்டி செயல் டுகிறது. இப்பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் ஊழியர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது திடீரென்று மேஜை கள் ஆடியுள்ளன. மேஜை மீது இருந்த பாட்டில்கள் கீழே விழுந்துள்ளன. இதுபோல் மகேந்திரா சிட்டியைச் சுற்றியுள்ள சில கிராமங்களிலும் நிலஅதிர்வு தெரிந்துள்ளது. இப்பகுதிகளில் நேற்று மாலையில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து நிறுவனங்களில் வேலைசெய்யும் ஊழியர்கள் அவசர அவசரமாக வெளியே வந்துள்ளனர். சில விநாடிகள் மட்டுமே நீடித்த லேசான அதிர்வைத் தொடர்ந்து எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படவில்லை. இருப்பினும் அச்சத்தின் காரணமாக சில ஊழியர்கள் அவசர அவசரமாக தங்கள் பணிகளை முடித்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றனர்.

சுற்றியுள்ள கிராமங்களிலும் அதிர்வு தெரிந்ததால் பொதுமக் கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி அரை மணி நேரத்துக்குப் பிறகு வீட்டுக்குள் சென்றதாக கூறப்படுகிறது.

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானியிடம் கேட்டபோது நில அதிர்வு தெரிந்ததாக சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். அதுகுறித்து விசாரிக்கும்படி கூறியுள்ளோம் என்றார்.

செங்கல்பட்டைச் சேர்ந்த வரு வாய் துறையினரும் நில அதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் என் றனர்.