‘சூர்யா 37’ அப்டேட்: அறிமுகப் பாடலைப் பாடிய செந்தில் கணேஷ்

0
0

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தின் அறிமுகப் பாடலைப் பாடியிருக்கிறார் ‘சூப்பர் சிங்கர்’ செந்தில் கணேஷ்.

‘சூப்பர் சிங்கர் 6’ போட்டியில் வெற்றி பெற்ற மக்கள் இசைப் பாடகர் செந்தில் கணேஷ் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘சீமராஜா’வில் பாடவிருப்பதாக தகவல் வெளியானது.இசையமைப்பாளர் டி.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை முதலில் அறிவித்தார்.

இந்நிலையில், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படத்தில், அறிமுகப் பாடலைப் பாடியிருக்கிறார் செந்தில் கணேஷ்.  இதற்கான பாடல் பதிவு சமீபத்தில் நடைபெற்றது. ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

மோகன்லால், பொம்மன் இரானி, ஆர்யா, சயிஷா சைகல் உள்ளிட்ட பலர் இப்படத்தில் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு லண்டனில் முடிவடைந்தது.

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘என்.ஜி.கே.’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, கே.வி.ஆனந்த் இயக்கும் படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் சூர்யா. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது. படத்துக்கு இன்னும் பெயரிடப்படாததால் ‘சூர்யா 37’ என்றே சொல்லப்படுகிறது.