சூர்யா, கார்த்தியை வைத்து படம் எடுக்கும் பாண்டிராஜ் | Surya and Karthi in Pandiraj direction!

0
0

சென்னை: நடிகர் சூர்யா-கார்த்தி இருவரும் சேர்ந்து நடிக்கும் திரைப்படத்தின் கதையைஇயக்குனர் பாண்டிராஜ் எழுதி வருகிறார்.

ஒரே குடும்பத்தில் சூர்யா, ஜோதிகா, கார்த்தி என மூன்றுபேர் நடிப்பு மற்றும் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கங்களிலும் முக்கிய பங்காற்றுகின்றனர்.

அண்ணன் சிங்கம், தம்பி சிறுத்தை என்று படத்திற்கு ஏற்றார்போல் பரபரப்பாக இருக்கும் இருவரையும் ஒரே படத்தில் இணைத்து ரசிகர்கள் பார்த்ததில்லை. ஆனால் விரைவில் அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இருவரும் சேர்ந்து நடிக்க கதை கேட்டு வருகிறோம் என கார்த்தி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சிறுத்தையும், சிங்கத்தையும் ஒன்றிணைக்கப் போகிறார் பண்டிராஜ் என தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் கடைக்குட்டி சிங்கம் திரைப்படம் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் ரிலீசுக்கு பிறகு சூர்யா, கார்த்தி இணைந்து நடிப்பதற்கான கதை தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா இப்போது கே.வி.ஆனந்த் படத்தில் நடித்து வருகிறார்.

பிரிந்த சிம்பு-நயன்தாராவையே இது நம்ம ஆளு படத்தில் இணைத்து வைத்து அழகு பார்த்தவர் இயக்குனர் பாண்டிராஜ்.