சுற்றிவளைத்த ரசிகர்கள்: சமாளித்து சூதானமாக நடந்த கத்ரீனா- வைரல் வீடியோ | Katrina Kaif handles tense situation in a cool manner

0
0

வான்கூவர்: கனடாவில் தன்னிடம் கோபித்துக் கொண்ட ரசிகர்களை நடிகை கத்ரீனா கைஃப் கையாண்ட விதம் குறித்த வீடியோ வெளியாகி வரைலாகியுள்ளது.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தபாங் டூர் என்ற பெயரில் அமெரிக்கா மற்றும் கனடாவில் நிகழ்ச்சி நடத்தி வருகிறார். அதில் பாலிவுட் நடிகைகள் கத்ரீனா கைஃப், ஜாக்குலின், சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்டோர் கலந்து கொண்டு நடனமாடி வருகின்றனர்.

இந்நிலையில் கனடாவில் உள்ள வான்கூவர் நகரில் தபாங் நிகழ்ச்சி நடந்து முடிந்த பிறகு கத்ரீனா தனது பாதுகாவலர்களுடன் காரில் ஏறச் சென்றார். அவரை காண காத்திருந்தவர்களில் ஒரு பெண் கத்ரீனா விருட்டென்று சென்றதை பார்த்து கடுப்பாகி எங்களுடன் எல்லாம் செல்ஃபி எடுக்க மாட்டீங்களோ என்று கூச்சலிட்டார்.

நாங்கள் ஒன்றும் உங்களுக்காக இங்கு காத்திருக்கவில்லை, சல்மான் கானுக்காக மட்டுமே காத்திருக்கிறோம் என்று ரசிகர்கள் கோஷமிட்டனர். இதை பார்த்த கத்ரீனா திரும்பி வந்து அமைதியாக இருங்க என்று அந்த பெண்ணிடம் கூறினார்.

நிலைமையை புரிந்து கொண்ட கத்ரீனா பிற ரசிகர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

தபாங் டூரில் 8 நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கத்ரீனாவுக்கு ரூ. 12 கோடி சம்பளமாம்.