சுனாமியில் சும்மிங் போட முடியாது… மில்க் நடிகையை விரட்டிவிட்ட மாப்பிள்ளை! | Mapillai actor puts redcard to milk actress

0
0

சென்னை: குடும்பத்தில் புயல் வீசி விடும் என்ற பயத்தில், மீண்டும் படவாய்ப்பு கேட்டு தன்னை அணுகிய மில்க் நடிகைக்கு மிகப்பெரிய கும்பிடு போட்டு திருப்பி அனுப்பி விட்டாராம் மாப்பிள்ளை நடிகர்.

திருமணத்திற்குப் பிறகு கணவரைப் பிரிந்து வாழ்ந்து வரும் மில்க் நடிகை, தமிழ் சினிமாவில் இரண்டாவது இன்னிங்க்ஸ் தொடங்கியுள்ளார். மாப்பிள்ளை நடிகருடன் இவர் நடித்த இரண்டு படங்களுமே ஹிட்டடித்ததால், இவர்களது கெமிஸ்ட்ரி பெரிதும் பேசப்பட்டது.

மீண்டும் படவாய்ப்புகளைப் பெறுவதற்காக கேமராவுக்கு பின்னாடியும் முன்னணி நடிகர்களுடன் நட்பு பாராட்டி வருகிறார் நடிகை. ஆனால், மாப்பிள்ளை மில்க் நடிகையுடன் பழகுவது அவரது குடும்பத்தாருக்குப் பிடிக்கவில்லையாம். இதனால் இனி அவருடன் படங்களில் நடிக்கக்கூடாது என கறாராக உத்தரவு பிறப்பித்து விட்டார்கள். எனவே, நடிகையிடமிருந்து கொஞ்சம் விலகி இருக்க முடிவு செய்துள்ளார் நடிகர்.

ஆனால், தொடர்ந்து நடிகரை பட வாய்ப்புகளுக்காக நடிகை நச்சரித்து வருகிறாராம். நடிகையால் வீட்டில் சுனாமி, புயல் எல்லாம் உருவாகி விடாமல் இருக்க, இனி தன்னை சந்திக்க வேண்டாம் என ரெட் கார்டு கொடுத்து விட்டாராம் நடிகர்.

பார்ப்போம் இந்த ரெட் கார்டு எத்தனை நாட்களுக்கு என சிரிக்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.